முரட்டுத்தனமான லுக்...ராயல் என்ஃபீல்டு ‘Classic 350 Gorkha Edition’ ராணுவ பாணியில் மாஸ் என்ட்ரி!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 'கூர்க்கா எடிஷன்' (Gorkha Edition) எனும் 'கிளாசிக் 350' (Classic 350) பைக்கின் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
Royal Enfield Classic 350 Gorkha Edition
Royal Enfield Classic 350 Gorkha Editionimage credit-bikedekho.com
Updated on

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபல ‘கிளாசிக் 350 பைக்கின் புதிய கூர்க்கா’ எடிஷன் ரூ.2.11 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகமாகி உள்ளது.

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் இந்தியாவின் பழமையான மற்றும் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர் ஆகும். இது ஐச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது.

1901-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டாலும், இந்தியாவில் 1955-ம் ஆண்டு முதல் என்ஃபீல்டு இந்தியா என்ற பெயரில் சென்னையில் உற்பத்தி தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள திருவொற்றியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் ஆகிய இடங்களில் இதன் பிரம்மாண்ட உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளன.

இந்நிறுவனத்தின் கிளாசிக் 350, ஹண்டர் 350, புல்லட், ஹிமலாயன் மற்றும் சூப்பர் மீட்டியூர் 650 போன்ற மோட்டார் சைக்கிள்கள் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவின் (Gorkha Regiment) வீரத்தைப் போற்றும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய கிளாசிக் 350 கூர்க்கா எடிஷன் (Royal Enfield Classic 350 Gorkha Edition) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் கூர்க்கா ரெஜிமெண்ட் வீரர்களின் துணிச்சல் மற்றும் திறமையை கவுரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பதிப்பு, ராணுவ பாணியிலான தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக மேட் மிலிட்டரி கிரீன் (Gorkha Green) நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த பைக்கில் எந்த தொழில் நுட்ப மாற்றமும் இல்லை என்றாலும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், மேட் மிலிட்டரி பச்சை நிறம் தான். இது கிளாசிக் 350-க்கு மேலும் ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது.

இதில் பிரத்யேக கூர்க்கா கிரீன் மேட் நிறம், பக்கவாட்டு பேனல்களில் கூர்க்கா ரெஜிமெண்ட்டின் குறியீடான குறுக்கு குக்குரி (Crossed Khukris) கத்தி சின்னம் மற்றும் கூர்க்கா எடிஷன் பிரத்யேக ஸ்டிக்கர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Royal Enfield Classic 350 Gorkha Edition கிளாசிக் 350
Royal Enfield Classic 350 Gorkha Edition|கிளாசிக் 350image credit-bikedekho.com

இந்த பைக்கில் குரோம் பூச்சு கொண்ட இன்ஜின் கேசிங்குகள் மற்றும் எக்ஸாஸ்ட், அத்துடன் குரோம் வயர்-ஸ்போக் சக்கரங்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. இந்தக் கலவையானது, இந்த சிறப்புப் பதிப்பிற்கு முரட்டுத்தனமான மற்றும் கிளாசிக் ஸ்டைலிங் லுக்கை அளிக்கிறது.

வழக்கமான கிளாசிக் 350 பைக்கில் உள்ள அதே 349சிசி, ஜே-சீரிஸ் (J-series) என்ஜின் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச்' (slip-and-assist clutch) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 20.2 ஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
'Flying Flea C6' : கிளாசிக் லுக்... மாடர்ன் டெக்னாலஜி... ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்!
Royal Enfield Classic 350 Gorkha Edition

5 ஸ்பீடு கியர்பாக்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்சி (Assist and Slipper Clutch), மற்றும் USB டைப்-சி (USB Type-C) ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த புதிய சிறப்புப் பதிப்பு, 'கூர்க்கா ரெஜிமெண்ட்' (Gorkha Regiment)-இன் பாரம்பரியத்தைப் போற்றுவதுடன், Classic 350-க்கு ஒரு தனித்துவமான அடையாளத்தையும் அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவில் கால் பதிக்கும் ராயல் என்ஃபீல்டு..காரணம் இது தான்..?
Royal Enfield Classic 350 Gorkha Edition

இந்த பைக்கிற்கான முன்பதிவு ஆகஸ்ட் 20-ம்தேதி தொடங்கியது. பைக்கோடு சேர்த்து பிரத்யேக ஹெல்மெட்டுகள், உயர் கணுக்கால் லெதர் பூட்டுகள் மற்றும் ராணுவ சீருடை ஈர்க்கப்பட்ட உடைகள் அடங்கிய 'கூர்க்கா கலெக்ஷன்' பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com