2026 முதல் 6 மாதங்களில் மாஸ் காட்டிய முன்னணி EV கார்கள் லிஸ்ட்....

2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
India's No 1 EV car
India's No 1 EV carimage credit-cardekho.com
Updated on

2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களின் (EV கார்கள்) பட்டியல் வெளியாகி வாகன சந்தையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் எம்ஜி.விண்ட்சர் இவி (MG Windsor EV) 19,080 கார்கள் விற்பனையாகி, இந்தியாவில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் காராக முதலிடத்தை பிடித்துள்ளது. 18,074 கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்இவி 9 எஸ் (Mahindra XEV 9S) 2-ம் இடத்திலும், 16,567 கார்களுடன் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) 3-ம் இடத்திலும் உள்ளன.

அதேபோல் நான்காம் இடத்தில் டாடா பன்ஞ் இவி 15,683 கார்களும், 11,242 கார்களுடன் மஹேந்திரா எக்ஸ்இவி 9இ ஐந்தாம் இடத்திலும், டாடா ஹரியர் இவி 10,499 கார்களுடன் ஆறாவது இடத்திலும், 8,572 கார்களுடன் மாருதி இ விடாரா ஏழாவது இடத்திலும், டாடா கர்வ் இவி 7,281 கார்களுடன் 8-வது இடத்திலும், 6,849 கார்களுடன் மஹேந்திரா பிஇ6 ஒன்பதாவது இடத்திலும், கடைசி இடத்தில் டாடா டியாகோ 6,816 கார்களும் விற்பனையாகியுள்ளது.

எம்ஜி விண்ட்சர் இவி

எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) இந்தியாவில் மிகவும் பிரபலமாக விற்பனையாகும் ஒரு நவீன எலெக்ட்ரிக் காராகும்.

இது முழு சார்ஜில் சுமார் 332 கி.மீ முதல் 449 கி.மீ வரை பயணிக்கக் கூடியது. 38 கிலோவாட் பேட்டரி 332 கிமீ வரையிலும், 52.9 கிலோவாட் பேட்டரி கொண்ட புரோ மாடல் 448 கிமீ வரையிலும் பயணிக்கும் திறன் கொண்டது. டிசி பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

பெரிய 15.6 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சொகுசான சோபா போன்ற பின் இருக்கைகள், பரந்த பனோரமிக் சன்ரூஃப், அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இந்த காரில் உள்ளது.

EV கார்கள்
EV கார்கள்image credit-kia.com

இந்த விண்ட்சர் EV-யில் 18 இன்ச் அலாய் வீல்கள், LED விளக்குகள், பவர்டு டெயில்கேட், இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய வசதிகள் கொடுக்கப்படவிருக்கின்றன.

விண்ட்சர் இவியின் விலை பேட்டரி ரெண்டல் (BaaS) திட்டத்தில் ரூ.9.99 லட்சம் முதல் தொடங்குகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9 எஸ்

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) என்பது ஒரு நவீன 7-சீட்டர் மின்சார எஸ்பிவி (Electric SUV) வாகனமாகும். XEV 9S சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், தற்போது உள்ளூரில் அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 679 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என மஹிந்த்ரா அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கார்களின் விலையை உயர்த்தியது மஹிந்திரா நிறுவனம்!
India's No 1 EV car

டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charging) ஆதரவு உள்ளது. 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் தேர்வுகளில் கிடைக்கிறது. அதிகபட்சமாக 282 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது.

7 இருக்கைகள் கொண்ட இந்த மாடல் 4,737 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம், 1,747 மிமீ உயரம் மற்றும் 2,762 மிமீ வீல்பேஸ் கொண்டு மிகவும் விசாலமானதாக உள்ளது.

பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் இரட்டை 65W USB சார்ஜிங் போர்ட்கள் வசதிகள், மூன்று 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 5G கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், பவர் மற்றும் காற்றோட்ட வசதியுள்ள இருக்கைகள், 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன. மேலும் 360-டிகிரி கேமரா, லெவல் 2+ ADAS, பார்க் அசிஸ்ட், ப்ளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் கூடுதல் ட்ரைவர் அசிஸ்ட் செயல்பாடுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.19.95 லட்சம் முதல் ரூ.30.70 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மாருதி சுசுகி இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி துவக்கம்: ரூ. 70,000 கோடி முதலீடு!
India's No 1 EV car

டாடா நெக்ஸான் இவி

டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) என்பது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் பிரபலமான மின்சார கார்களில் (EV) ஒன்றாகும். டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸான் EV-ஐ 30kWh மற்றும் 45kWh என இரண்டு முக்கிய பேட்டரி விருப்பங்களில் வழங்குகிறது.

இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் பேட்டரி திறனைப் பொறுத்து சுமார் 275 கி.மீ முதல் 489 கி.மீ வரை மைலேஜ் தரும். டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charging) வசதி உள்ளது.

சாதாரண சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 60 நிமிடங்களும் பிடிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற உட்புற வசதிகளும், ஏர்பேக்குகள், ஈஎஸ்பி (ESP), மற்றும் ஏடாஸ் (ADAS) போன்ற நவீன பாதுகாப்பு வசதிகளும் டாடா நெக்ஸான் இவியில் உள்ளன.

டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

நீங்கள் சென்னையில் கார் வாங்க விரும்பினால், அதன் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ.13.65 லட்சம் முதல் ரூ.19.10 லட்சம் வரை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மின்சார கார் சந்தையில் புதிய அதிரடி: பெரிய பேட்டரியுடன் களமிறங்கிய புதிய ‘Hyundai Ioniq 5 facelift’!
India's No 1 EV car

அடிப்படை மாடலான கிரியேட்டிவ் பிளஸ் 30kWh காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் ஆகும். அதே சமயம், அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய ஆன்-ரோடு விலை 13.65 லட்சம் ஆகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com