கடன் சுமையை குறைக்கணுமா? 'ரீ-பைனான்ஸ்' பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

refinance-benefits
refinance-benefits
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வசியத்திற்காக கடன் வாங்குவது போய் இப்பொழுது ஆடம்பரத்திற்காகவும் கடன் வாங்கும் நிலை உள்ளது. அதுதான் இ.எம்.ஐ க்கு கிடைக்கிறதே என்று கடன் வாங்குபவர்கள் அதிகம். சின்ன தொகை தானே கட்டிவிடலாம் என்று ஒவ்வொரு கடனாக வாங்கி கடைசியில் இ.எம்.ஐ கட்டுவதில் சிக்கிக் கொள்பவர்கள் அதிகம் பேர். இதனை தவிர்க்க ஒரே நேரத்தில் பல கடன்கள் வாங்குவது தவிர்ப்பது நல்லது.

பல கடன்கள் இருந்தால் வட்டி கட்டவேண்டும், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கடனில் விழுபவர்கள் அதிகம். பின் எப்படித்தான் கடனை அடைப்பது என்று தோன்றுகிறதா அதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. அதுதான் ரீபைனான்ஸ் (Refinance).

ரீ பைனான்ஸ் என்றால் என்ன?

ரீ பைனான்ஸ் அல்லது மறு நிதியளிப்பு என்பது, அதிக வட்டி விகிதத்தில் உள்ள பழைய கடனை அடைத்துவிட்டு, புதிய வட்டி விகிதம் அல்லது சிறந்த விதிமுறைகளுடன் வேறொரு வங்கியிலோ அல்லது அதே வங்கியிலோ புதிய கடனைப் பெறும் செயல்முறையாகும். இது குறைந்த வட்டி, குறைந்த மாதத் தவணை (EMI) அல்லது நீண்ட கால அவகாசம் போன்ற நன்மைகளைப் பெற உதவுகிறது.

ரீ பைனான்சின் முக்கிய அம்சங்கள்:

*குறைந்த வட்டி விகிதம்:

சந்தையில் வட்டி விகிதங்கள் குறையும்பொழுது, அதிக வட்டி விகிதத்தில் உள்ள பழைய கடனை புதிய குறைந்த வட்டி விகிதத்தில் கடனை மாற்றிக்கொள்ளலாம். இப்படி மாற்றிக் கொள்வதன் மூலம் வட்டிச் சுமையை குறைக்கலாம்.

*EMIஐக் குறைத்தல்:

கடனைத் திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் மாதத் தவணையை (EMI) குறைக்க முடியும்.

*பணப்புழக்கம் (Cash-out Refinance):

சொத்தின் மதிப்பில் உள்ள கூடுதல் ஈக்விட்டியை பணமாகப் பெறலாம். வீட்டின் மதிப்பு அதிகரித்திருந்தால், இருக்கும் கடனுக்கு மேல் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறமுடியும்.

*பல்வேறு கடன்களை ஒன்றிணைத்தல் (Debt Consolidation):

தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற பல கடன்களை ஒரே கடனாக மாற்றி நிர்வகிப்பதை எளிதாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மிரட்டலான வசதிகளுடன் களமிறங்கிய புதிய 'வைபர்' மின்சார சைக்கிள்!
refinance-benefits

எப்போது ரீ பைனான்ஸ் செய்யவேண்டும் தெரியுமா?

*தற்போதைய கடனை விட குறைவான வட்டிக்கு வேறு வங்கி கிடைக்கும் பொழுது அதாவது வட்டி விகிதங்கள் குறையும் பொழுது ரீ பைனான்ஸ் செய்யலாம்.

*நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால், வங்கிகள் குறைந்த வட்டியில் கடனை மாற்றித்தர முன்வரும். அதாவது கிரெடிட் ஸ்கோர் மேம்படும் பொழுது.

*இஎம்ஐ கட்ட கடினமாக இருக்கும்பொழுது கால அவகாசத்தை அதிகரித்து மாதத் தவணையை குறைக்கலாம்.

ரீ பைனான்ஸ் செய்வதன் நன்மைகள்:

*வட்டி விகிதம் குறைவதால், மாதத்தவணை (EMI) மற்றும் ஒட்டுமொத்த வட்டிச் செலவு குறையும்.

*குறைவான இஎம்ஐ காரணமாக மாதந்தோறும் கையில் அதிக பணம் தங்கும். மாதாந்திர பணத் தேவை (cash flow) அதிகரிக்கும்.

*கடன் திரும்ப செலுத்துவதில் நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

*கடனை விரைவாக முடிக்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்துடன் குறுகிய காலத்தைத் தேர்வு செய்யலாம்.

*மாறுபடும் வட்டி விகிதத்தில் (floating rate) இருந்து நிலையான வட்டி விகிதத்திற்கு (fixed rate) மாறி ஆபத்தைக் குறைக்கலாம்.

இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:

ரீ பைனான்ஸ் செய்யும் பொழுது வழக்கமாக புதிய செயலாக்கக் கட்டணங்கள் (processing fees) மற்றும் ஆவணக் கட்டணங்கள் இருக்கும். எனவே சேமிக்கப்படும் வட்டித் தொகை, இந்தக் கட்டணங்களைவிட அதிகமாக உள்ளதா என்று கணக்கிட்டு முடிவெடுக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com