சிறிய நகரங்களில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்குவது எப்படி? குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட வழிகள்!

சிறிய நகரங்களில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்கி மாதம் பல ஆயிரம் வருமானம் ஈட்ட வேண்டுமா? வெற்றி பெறுவதற்கான வழிகள் இதோ.
A successful small town businessman
தொழில் தொடங்குவதுImage credit: AI Image
Updated on

பெரிய நகரங்களில் மட்டுமே தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் சிறிய நகரங்கள்தான் தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடமாக மாறியுள்ளன. குறைந்த செலவு, குறைந்த போட்டி மற்றும் மக்களிடையே இருக்கும் அதிகப்படியான நம்பிக்கை போன்றவை சிறிய நகரங்களின் மிகப்பெரிய பலம். உங்கள் வீட்டின் ஒரு சிறிய பகுதியைத் தொழில் கூடமாக மாற்றி, முறையான திட்டமிடலுடன் செயல்பட்டால், சில மாதங்களிலேயே நல்ல லாபத்தைப் பார்க்க முடியும்.

சிறிய நகரங்களுக்கு ஏற்ற, நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் லாபகரமான சில தொழில் யோசனைகள் யோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

1. சேவை சார்ந்த தொழில்கள்:

சிறிய நகரங்களில், பெரிய நிறுவனங்களை விட, உள்ளூர் மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமே மக்கள் சேவை பெற விரும்புகிறார்கள். உங்களின் தனித்திறமையைப் பயன்படுத்தி நீங்கள் பின்வரும் தொழில்களை வீட்டிலிருந்தே தொடங்கலாம்.

மொபைல் மற்றும் லேப்டாப் சர்வீஸ்: இன்று அனைவரிடமும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. சிறிய பழுதுபார்ப்புகளுக்குக்கூட பெரிய நகரங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உள்ளது. நீங்களே ஒரு சிறிய பயிற்சியைப் பெற்று இதைச் செய்தால், வாடிக்கையாளர்கள் தானாகவே தேடிவருவார்கள்.

தையல் கலை மற்றும் பேஷன் டிசைனிங்: ஆடை அலங்காரத்திற்கு எப்போதும் மவுசு உண்டு. தையல் இயந்திரம் மற்றும் துணி தைக்கும் திறன் இருந்தால் போதும், நிரந்தர வருமானம் உறுதி.

டியூஷன் சென்டர்: கல்விக்கு எக்காலத்திலும் தேவை உண்டு. உங்கள் பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதன் மூலம் கண்ணியமான வருமானத்தைப் பெறலாம்.

ஆன்லைன் படிவங்கள் நிரப்பும் சேவை: அரசுத் தேர்வுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பிற சான்றிதழ்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்வது பலருக்குத் தெரிவதில்லை. இதை ஒரு சேவையாகச் செய்து கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
35 சதவீதம் மானியத்தில் ஊறுகாய் பிசினஸ் பண்ணி ஜெயிக்கணுமா? இருக்கவே இருக்கு மத்திய அரசு திட்டம்..!!
A successful small town businessman

சிறிய நகரங்களில் வாய்வழி விளம்பரம்தான் சக்தி வாய்ந்தது. ஒரு வாடிக்கையாளர் திருப்தியடைந்தால், அவரே பத்து பேருக்கு உங்களைப் பரிந்துரைப்பார்.

2. உற்பத்தித் தொழில்கள்:

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்கள் எப்போதும் விற்பனையாகும்.

உணவுப் பொருட்களான ஊறுகாய், அப்பளம், மசாலா பொடிகள், பலகாரங்கள் மற்றும் பேக்கரி ஐட்டங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான அகல் விளக்குகள், வாசனை மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள் போன்றவற்றைத் தயாரித்து உங்கள் தெருவில் உள்ள கடைகள், வாரச் சந்தைகள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு விற்பனை செய்யலாம்.

ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கி, வாடிக்கையாளர் களின் வரவேற்பைப் பொறுத்து சமூக ஊடகங்கள் மூலம் ஆர்டர்களைப் பெற்று தொழிலை விரிவாக்கலாம்.

A successful small town business woman
தொழில் தொடங்குவதுImage credit: AI Image

3. ஸ்மார்ட் தொழில்கள்:

இணையம் இன்று எல்லாவற்றையும் எளிதாக்கிவிட்டது. சிறிய நகரத்தில் இருந்துகொண்டே உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய முடியும்.

டிஜிட்டல் சேவைகள்: உங்கள் பகுதியில் உள்ள சிறிய கடைகள், பள்ளிகள் மற்றும் கோச்சிங் சென்டர்களுக்குத் தங்கள் தொழிலை ஆன்லைனில் கொண்டு செல்லத் தெரியாது. அவர்களுக்கு சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட், வீடியோ எடிட்டிங் அல்லது டிஜிட்டல் விளம்பரங்களைச் செய்து கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
காபி ஷாப் வெச்சா லாபம் வராது கண்ணா.. உலகை ஆளும் பிசினஸ் ரகசியம் இதுதான்!
A successful small town businessman

ஆன்லைன் ரீசெல்லிங் (Reselling): சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களைப் புகைப்படம் எடுத்து ஆர்டர் பெற்று விற்பனை செய்வது தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்குப் பெரிய முதலீடு தேவையில்லை.

வெற்றிபெற உதவும் தொழில் தொடங்குவது தொடர்பான அடிப்படை விதிகள்:

1. உங்கள் பகுதியில் எந்தத் தேவை அதிகமாக உள்ளது என்று முதலில் கவனியுங்கள்.

2. ஆரம்பத்திலேயே அதிக பணம் முதலீடு செய்யாமல், சிறு அளவில் தொடங்கி அனுபவம் பெறுங்கள்.

3. நீங்கள் வழங்கும் பொருளோ அல்லது சேவையோ தரமானதாக இருந்தால் மட்டுமே உங்கள் தொழில் நீண்ட காலம் நிலைக்கும்.

4. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக் குரூப்புகள் மூலம் உங்கள் தொழிலைப் பற்றிப் பரப்புங்கள்.

சிறிய நகரங்களில் தொழில் தொடங்க பெரிய முதலீடு தேவையில்லை, உங்கள் உழைப்பும், சரியான திட்டமிடலும்தான் தேவை. சேவை மனப்பான்மையுடன் நீங்கள் செய்யும் தொழில், சில மாதங்களிலேயே நல்ல லாபத்தைத் தரத்தொடங்கும்.

20 Profitable Small Business Ideas for Villages

குறிப்பு: இந்தக் கட்டுரை பொதுவான வணிகக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எந்தவொரு தொழிலையும் தொடங்கும் முன், உங்கள் உள்ளூர் சந்தை மற்றும் சட்ட நடைமுறைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
logo
Kalki Online
kalkionline.com