ஆசை ஆசையாக கட்டிய வீட்டை விற்கப் போறீங்களா? இடையில் நிற்கும் 'Capital Gains Tax' - சமாளிப்பது எப்படி?

வீடு விற்பனையில் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரியை (LTCG) தவிர்க்க, அந்தப் பணத்தை 2 ஆண்டுகளுக்குள் மற்றொரு புதிய வீடு வாங்கவோ, 3 ஆண்டுகளுக்குள் புதிய வீடு கட்டவோ பயன்படுத்தலாம்.
save tax when selling your house
home sale
Published on

வரி செலுத்துவது சட்டப்படி நம் கடமை என்றாலும், அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகைகளை பயன்படுத்தி வரியை சேமிக்கும் வழிகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பார்த்து பார்த்து கட்டிய வீட்டை விற்க முடிவெடுக்கும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டம் போடுவோம். ஆனால் மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) என்ற பெயரில் ஒரு பெரிய தொகையை வரியாக செலுத்த வேண்டி இருக்கும் என்பதை மறந்து விடுவோம்.

புதிய வீடு வாங்குதல் (பிரிவு 54):

வீடு விற்பனையில் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரியை (Long Term Capital Gains) தவிர்க்க, அந்தப் பணத்தை 2 ஆண்டுகளுக்குள் மற்றொரு புதிய வீடு வாங்கவோ, 3 ஆண்டுகளுக்குள் புதிய வீடு கட்டவோ பயன்படுத்தலாம். விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை (Capital Gains) மற்றொரு குடியிருப்பு சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் (பிரிவு 54ன் கீழ் முதலீடு) வரி விலக்கு பெறலாம்.

பத்திரங்களில் முதலீடு (பிரிவு 54EC Bonds):

வீடு விற்ற ஆறு மாதங்களுக்குள் மூலதன ஆதாய பத்திரங்களில் (Capital Gains Bonds) முதலீடு செய்வதன் மூலம் வரியை சேமிக்கலாம். வீடு விற்ற லாபத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அல்லது ஊரக மின்மயமாக்கல் கழகம் போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற பாண்டுகளில் முதலீடு செய்யலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்து வரி விலக்கு பெற முடியும். இந்த பாண்டுகளில் 5 ஆண்டுகள் லாக் இன் காலம் உண்டு.

இதையும் படியுங்கள்:
உற்பத்தி செய்தால் போதுமா? நல்லா விற்பனை ஆக வேண்டாமா? அப்போ என்ன செய்யணும்?
save tax when selling your house

முதலீட்டு கணக்குத் திட்டம் (CGAS):

வீட்டை விற்ற பணத்தில் புதிய வீடு வாங்க உடனடியாக பணத்தை பயன்படுத்தவில்லை என்றால், அந்தப் பணத்தை அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உள்ள மூலதன ஆதாய கணக்குத் திட்டத்தில் (Capital Gains Account Scheme) பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் தற்காலிகமாக வரி செலுத்துவதை தவிர்க்கலாம்.

சொத்தை வைத்திருக்கும் காலம் (Holding Period):

சொத்தை வாங்கியதில் இருந்து 24 மாதங்களுக்குப் பிறகு விற்கும்போது, அது நீண்ட கால சொத்தாக கருதப்பட்டு, குறியீட்டு நன்மைகளுடன் (Indexation Benefits) 20% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.

வீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தால் Cost Inflation Index (CII) பயன்படுத்தி தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப வீட்டின் விலையை உயர்த்தி கணக்கிடலாம். இது காகித அளவிலான லாபத்தை (taxable profit) கணிசமாக குறைக்கும்.

பழுது பார்ப்பு செலவுகள்:

வீடு வாங்கிய பிறகு அதில் செய்த முக்கிய மராமத்து பணிகள், பழுதுபார்ப்பு, கூடுதல் அறைகள் கட்டியது அல்லது புதுப்பித்தல் செலவுகளை கணக்கில் காட்டி, விற்கப்படும் விலையில் கழித்து லாபத்தைக் குறைக்கலாம். இது லாபத்தை குறைத்துக் காட்டி வரிச் சுமையை குறைக்கும். இதற்கான முறையான ரசீதுகள் அவசியம்.

விற்பனை தொடர்பான செலவுகள்:

வீட்டை விற்பனை செய்ய கொடுத்த புரோக்கர் கமிஷன், விளம்பர செலவுகள் மற்றும் பத்திரப்பதிவு செலவுகள் ஆகியவற்றை விற்பனை தொகையிலிருந்து கழித்துக் கொள்ளலாம்

கூட்டு உரிமை (Joint Ownership):

மனைவியுடன் இணைந்து சொத்தை வாங்கியிருந்தால், இருவரின் பெயரிலும் வருமான வரி தாக்கல் செய்து வரிச் சுமையை பகிர்ந்து கொள்ளலாம்.

ஒப்பந்த ஆவணங்கள்:

பத்திரப்பதிவு வாங்கல் மற்றும் விற்பனை ஒப்பந்த ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்வதன் மூலம், வரி கணக்கீட்டின் பொழுது தேவையற்ற வரி செலுத்துவதை தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
பூமில வீடு வாங்க காசு இல்லையா? கவலை வேணாம்... நிலவுல ப்ளாட் போட்டு விக்கிறாங்க!
save tax when selling your house

வரி விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்படலாம் என்பதால், இறுதி முடிவு எடுக்கும் முன்பு ஒரு தணிக்கையாளரை (Chartered Accountant) அணுகுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com