
ஆடி ஏஜி (Audi AG) என்பது ஆடி அல்லது அவுடி என்ற வணிகப்பெயரில் கார்களைத் தயாரிக்கும் ஒரு ஜெர்மானிய நிறுவனமாகும். இந்த நிறுவனம், மூன்றாம் தலைமுறை கியூ 3 (Audi Q3) காரை சர்வதேச அளவில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்த நிலையில், இந்த கார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. புதிய ஆடி Q3 என்பது ஒரு சொகுசு எஸ்யூவி (SUV) மற்றும் ஐந்து இருக்கைகள் கொண்ட அமைப்புடன் கேபினை காற்றோட்டமாக உணர வைக்கும் பனோரமிக் சன்ரூஃப் உடன் வழங்கப்படுகிறது. இது நகரம் மற்றும் கரடுமுரடான நெடுஞ்சாலை ஓட்டுதலுக்கு ஏற்றதாக அமைகிறது.
இது, 147 பி.எச்.பி. பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 261 பி.எச்.பி. பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 147 பி.எச்.பி. பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என 3 வித என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.
இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், பெட்ரோல் எஞ்சின் வேகமாக ஓட்டும்போது கூட மிகவும் அமைதியாக சத்தம் வராமல் இருக்கும். இதில் விரைவாக மாற்றும் ஏழு வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனைப் கொண்டுள்ளது. இது அதிக வேகமாக சீரற்ற சாலைகளில் செல்லும் போதும் நிலையானதாகவும் பயணிகள் அதிர்ச்சியை உணரா வண்ணமும் இருக்கும். Q3 நகர போக்குவரத்தில் 9.7kmpl வேகத்திலும், நெடுஞ்சாலையில் 18.6kmpl வேகத்திலும், 7.14 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
இதில் ஒரு சப் வூஃபர் மற்றும் ஒரு ஆம்ப்ளிபையர் உட்பட பத்து ஸ்பீக்கர்களைக் கொண்ட 180W ஆடியோ ஒலி அமைப்பு உள்ளது. 11.9 அங்குல புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.8 அங்குல டச்ஸ்கிரீன் மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல்
மேட்ரிக்ஸ் LED ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டிஜிட்டல் OLEDs பின்புற விளக்குகள், பவர்டு முன் இருக்கைகள் போன்ற அம்சங்களுடன் புதிய Q3 வருகிறது. மேலும் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட்டுடன் வருகிறது.
நான்கு பேர் (ஓட்டுநர் சேர்க்காமல்) கொண்ட அழகான குடும்பத்தினர் செல்வதற்கான நடைமுறை தன்மை மற்றும் விசாலமான கேபின் வசதிகள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
புதிய Q3ல் பயனர்களின் பாதுகாப்பிற்காக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட 6 ஏர்பேக்ஸ், பின்புற கேமரா, ADAS (Advanced Driver-Assistance Systems), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இந்த கார் யூரோ NCAP நடத்திய விபத்து சோதனையில் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி நிறுவனம் Q3 உட்பட ஆடி கார்களுக்கு 10 ஆண்டுகள் நீட்டித்த உத்தரவாதத்தை அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில் கியூ3 பிரீமியம் (பேஸ் மாடல்) ₹43.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், கியூ3 பிரீமியம் பிளஸ் ₹47.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், கியூ3 டெக்னாலஜி ₹52.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் கிடைக்கிறது. கியூ3 என்பது மெருகூட்டல், ஃபீல்-குட் மற்றும் மிக முக்கியமாக - பேட்ஜ் வேல்யூ ஆகியவற்றின் அடிப்படையில் இதன் விலை கொஞ்சம் கூடுதலாக உள்ளது.
இது பிரீமியம், பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என்ற மூன்று வேரியன்ட்களிலும், நானோ கிரே மெட்டாலிக்(Nano Grey Metallic), கிளாசியர் வெள்ளை மெட்டாலிக்(Glacier White Metallic), மைதோஸ் பிளாக் மெட்டாலிக்(Mythos Black Metallic), நவர்ரா ப்ளூ மெட்டாலிக்(Navarra Blue Metallic), Progressive Red Metallic என்ற 5 விதமான வண்ணங்களிலும் கிடைக்கிறது. இந்த கார் அடுத்த ஆண்டு (2026)இந்திய சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி கியூ 3 ஸ்போர்ட் பேக்கிற்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ள நிலையில், இதை ரூ.2 லட்சத்துக்கு முன்பதிவு செய்யலாம்.