ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் கார்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஹாட்பேக், செடான், எஸ்.யூ.வி, கூபே... வரை பல்வேறு ரகங்களில் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனையாகின்றன. அதில், சில எலெக்ட்ரிக் கார்களை அறிந்து கொள்வோம்.
38 கிலோ வாட்ஸ் பேட்டரிக் பேக், ஒரு சார்ஜில் 331 கி.மீ ரேஞ்ச், பி.எம்.எஸ்.எம் மோட்டார், 134 பி.எச்.பி, 200 என்.எம் டார்க், 604 லிட்டர் பூட் ஸ்பேஸ், பிசினஸ் கிளாஸ் இன்டீரியர் அம்சங்கள், புதுமையான டிசைன்... இப்படி எம்.ஜி. வின்ட்செர் இ.வி, மற்ற கார்களை விட கொஞ்சம் புதுமையாக தோற்றமளிக்கிறது. எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.13.5 லட்சத்தில் இருந்து
பெர்மனென்ட் மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டார், 127 பி.எச்.பி பவர், 215 என்.எம் டார்க் திறன், 350 லிட்டர் பூட் ஸ்பேஸ், 15 விதமான வேரியண்ட் மாடல்கள், 30, 40, 50 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக், ஒரு சார்ஜில் 390 கிலோ மீட்டர் ரேஞ்ச் என செயல்திறன் அம்சங்களில் நெக்ஸான் இ.வி அசத்துகிறது. எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.12.5 லட்சத்தில் இருந்து.
சிட்ரோயன் இ.சி.3 எலெக்ட்ரிக் காரும் பல அட்டகாசமான அம்சங்களால் நிறைந்திருக்கிறது. ஸ்டைலான தோற்றம், 50 நிமிடத்திலேயே 10 முதல் 80 சதவீத சார்ஜிங், 246 கி.மீ. ரேஞ்ச், தொடுதிரை, வைபை வசதியில் இணையும் திரைகள், ஏ.பி.எஸ். உடன் இ.பி.டி. பாதுகாப்பு வசதி, டிஜிட்டல் சாவி வசதி, 29 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பேக், 56 பி.எச்.பி திறன் மற்றும் 143 என்.எம் டார்க் இவற்றுடன் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.12.7 லட்சம் விலையிலேயே கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் தயாரிப்பான இது, முரட்டுத்தனமான எக்ஸ்.யூ.வி. தோற்றம் கொண்டிருக்கிறது. ஆட்ரினாக்ஸ் தொடு உணர்வு கட்டுப்பாடு, எல்.இ.டி டி.ஆர்.எல் விளக்குடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லாம்ப், ஏ.சி மற்றும் டி.சி சார்ஜிங் முறைகள், 10.25 அங்குல தொடு திரை, அலெக்ஸாவுடன் இணையும் குரல் வழி கட்டுப்பாடுகள், ஓவர் தி ஏர் அப்டேட் வசதிகள், பின்பக்க பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜர் வசதி, இரு பக்க ஆட்டோமெட்டிக் ஏ.சி, பின் இருக்கைகளுக்கான ஏ.சி வென்ட், 34.5 மற்றும் 39 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பேக், 146 பி.எச்.பி ஆற்றல், சன்ரூப் வசதிகள், 375 கி.மீ முதல் 465 கி.மீ வரையிலான ரேஞ்ச்... என ஸ்பெஷலான விஷயங்களுடன், இந்த எலெக்ட்ரிக் கார் சாலைகளில் உலா வருகிறது. இதன் ஷோரூம் விலை ரூ.16.5 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.
டாடா நிறுவனத்தின் டியாகோ இ.வி, டிகோர் இ.வி, நெக்ஸான் இ.வி இவற்றுக்கு அடுத்தபடியாக டாடா கர்வ் இ.வி கொஞ்சம் வித்தியாசமான கார். ஏனெனில் இதை கூபே ரகமாக தயாரித்து உள்ளனர். இதில் 45 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி, 118 பி.எச்.பி ஆற்றல், 215 என்.எம் டார்க், 430 முதல் 502 கி.மீ வரையிலான மைலேஜ் ரேஞ்ச், 500 லிட்டர் பூட் ஸ்பேஸ், இருபக்க கண்ணாடிகளுக்கு கீழ் கேமரா வசதி, சன்ரூப், தொடுதிரை, இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், அடாஸ்-2 பாதுகாப்பு அம்சங்கள், கலக்கலான டிசைன், புதுமையான வண்ணங்கள்... இப்படி எக்ஸ் ஷோரூம் விலையான ரூ.17.5 லட்சத்தில் இருந்தே ஆரம்பமாகிறது.