செய்யும் தொழிலில் வெற்றி பெற..!

business
Business
Published on

இன்று உலக மக்களின் சராசரி வாழ்வுக்கு வேலை செய்தாலே அதுவே உத்தமம்தான். ஆனால் வழிமுறைகள் தெரியாமல் தொழில் செய்வது என்பது வரும் படியை விட பன்மடங்கு செலவு செய்வதாகும்.

தொழிலின் தன்மைகள் மற்றும் செய்யும் விதம்:

தொழில் என்பது தொழிற்சாலை, விவசாயம், வியாபாரம் நிர்வாகமாகவும் இருக்கலாம். அதோடு அதில் கஷ்டப்பட்டு உழைப்பவர்களாகவும் இருக்கலாம். தொழிலுக்கு வேண்டிய பணம் இல்லையே என்று நினைப்பவர்கள் எப்போதும் நினைத்து கொண்டேதான் இருப்பர். கோடிக் கணக்கான பணம் கடனாக கிடைத்தாலும் நிர்வாகம் நம் கையில் இல்லாமல் இருந்தால் அதனால் என்ன பலன் கிடைக்கும். பறக்க பறக்க நினைவு ஓட்டம், அமைதி இல்லா வாழ்வு ஏது பலன். பெரிய நன்மைகளை தேடி ஓடும் போது சிறிய வருமானங்கள் போய்விட்டால் அதுவும் பெரும் வீழ்ச்சியை அடையச் செய்யும்.

தொழிலை தெய்வமாக கருதுபவர்கள் எப்போதும் சுத்தமாக ஒழுங்காக, உண்மையாக இருக்கும் படியாக தன் தொழிலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். யார் ஒருவராயினும் அவர்களுக்கு அருகாமையில் கைக்கெட்டிய தொழிலை செய்வது மகத்துவம் வாய்ந்தது.

மேலும் கடினமானத் தொழிலை சுலபமாக முடிக்கத் தெரிதல் அவசியம். அவரவர் வேலையை கருத்துடன் செய்வதுதான் திறமை. உதாரணமாக எல்லா விதமான பொருள்களையும் அருகில் வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை எளிதாகி விடுகின்றது. சமையல் செய்யும் போது கூட ஒன்றை செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் எடுத்து வைத்து விட்டு செய்தோமானால் மிகவும் எளிதாக செய்து முடித்து விடலாம்.

ஒரு துணியை தைக்க முற்படும் போது அதற்கு தேவையான பொருட்களை மட்டுமே அருகில் வைத்துக் கொண்டு மிஷினின் மேல் வேறு எந்த ஒரு பொருளும் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்போமானால் அந்த துணியை மகிழ்ச்சியாக விரைவில் தைத்து முடித்து விடலாம்.

நேரத்தின் முக்கியத்துவம்:

வேலையில் நேரம் என்பது முக்கியமான ஒன்று. வேலை நேரத்தை ஒழுங்காக கடைபிடிப்பது, நேரத்துக்கு தக்கப்படி வேலையை துரிதப்படுத்தல் அதே நேரம் வேலையிலும் கெடுதல் இல்லாது பார்த்தல் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
மீட்டிங் அறையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டால்... இந்த 6 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!
business

உதாரணமாக, பரிட்சை எழுதும் நபர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பொழுதை கணக்கிடுவது போல் சில சமயங்களில் சில வேலைகளில் கணக்கிட வேண்டியது வரும். மேலும் ஒரு தொழிலை தொடங்கும் போது அதிலிருக்கும் பிரச்னைகளையும், ஆபத்துக்களையும் தெரிந்து இறங்க வேண்டும். தொடங்கிய பிறகு அது நல்லது, இது நல்லது என்ற மன நிலையை உருவாக்க முயல்வது நல்லதாகாது.

தொடங்கிய தொழிலை கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்றும், சூழ்நிலையில் தொழில் செய்பவர்கள் விளையாட்டு வீரர்களைப் போல காட்சியளிக்க வேண்டியது அவசியம். தொழிலையும் காப்பாற்றி, அவர்களோடு உழைப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நோக்கமும் மிகவும் முக்கியமானதாகும்.

செய்யும் தொழிலில் மகிழ்ச்சி

எந்தவொரு வேலையாக இருந்ததாலும், நினைவு அங்கே முக்கியமாகின்றது. நினைவும் செயலும் ஒன்று போல் இருக்க வேண்டியது அவசியம். மேலும் மகிழ்ச்சியுடன் செய்வது வேலையை எளிதாக்கும். தொழில் செய்யும் போது பயம் நீங்கி, கடமை தெரிந்து, அறிவு கொண்டு சந்தோசமாக செய்ய வேண்டியது அவசியமாகும். மேலும் பெற்றோர்கள் தனது குழந்தைகளிடம் வேலைகளுக்கான திட்டங்களை உணர்த்துவது, நிலைமையை புரிய வைப்பது நல்லது. சந்தோசமாக வேலை செய்ய பழக்கி கொடுத்தல் நல்லது.

இதையும் படியுங்கள்:
குறைந்த சம்பளம் இருந்தபோதிலும் நிதி ரீதியாக நல்ல நிலையில் இருக்க முடியுமா? இருக்கிறார்களே! எப்படி?
business

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com