
இருசக்கரம் மற்றும் 3 சக்கர வாகன பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது முதன்மை மோட்டார் சைக்கிளான TVS Apache அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதையொட்டி புதியதாக 2 புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தி உள்ளது. RTR 160 4V And RTR 200 4V ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களை புதிய, அம்சங்கள் நிறைந்த, ரேஞ்ச்-டாப்பிங் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கண்களை கவரும் வகையிலான இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் லிவரி, யு.எஸ்.பி. சார்ஜர், கருப்பு (சாம்பெயின்), தங்கநிறத்தில் டூயல்-டோன் அலாய் சக்கரங்கள் மற்றும் 20 ஆண்டு லேகோவுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இரண்டு பைக்குகளிலும் 4-வால்வு (4V) இன்ஜின் உள்ளது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 5 இன்ச் டிஎஃப்டி கிளஸ்டர், வாய்ஸ் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வருகிறது. இந்த பைக் மூன்று நிறங்களில் அதாவது ரேஸிங் ரெட், மெரைன் ப்ளூ, மெட்டலிக் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
அத்துடன் எல்.இ.டி., டி.ஆர்.எல்.களுடன் கூடிய புதிய கிளாஸ்டி புரெஜெக்டர் முகப்பு விளக்கு உள்பட முழுவதும் எல்.இ.டி. விளக்குகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய புரெஜெக்டர் அமைப்பு இரவு சவாரியின் போது சிறந்த வெளிச்சத்தை வழங்கும். ஆர்.டி.ஆர். 160 4வி ஆனது ஆர்.டி.ஆர். 200 4வி ஐ விட அதிக மைலேஜ் தருவதுடன் விலையும் அதிகம்.
ஆர்.டி.ஆர். 160 4V பைக் 160cc என்ஜினையும், 200 4V பைக் 200cc என்ஜினையும் கொண்டுள்ளது.
இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ஆர்.டி.ஆர் 200 4வி பைக்கில் காஸ்மெட்டிக் மற்றும் டெக்னாலஜி சேர்க்கை இதில் அதிகமாக உள்ளது. மேலும் இதில் 160 சிசி ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய மாடல்களில் அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் போன்ற மூன்று விதமான ஓட்டும் மோட்களுடன் இரட்டை சேனல் ஏ.பி.எஸ் (ABS) வசதி உள்ளது. இது பயனாளிகளுக்கு மேம்பட்ட வாகனம் ஓட்டும் அனுபவத்தை அளிக்கிறது. இந்த சவாரி முறைகள் அதற்கேற்ப என்ஜின் வெளியீட்டை அமைக்கின்றன. இது நகரத்திலோ அல்லது மழை நாளிலோ பைக்கை எளிதாக ஓட்ட உதவுகிறது.
அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4V மற்றும் 200 4V இரண்டுமே ஏற்கனவே இரட்டை சேனல் ABS வசதியைக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது TVS இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு கூடுதல் பாதுகாப்பிற்காக மாறக்கூடிய இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பையும் வழங்கியுள்ளது. அதாவது பாதுகாப்பு காரணியை ஒரு படி மேலே கொண்டு சென்று, பைக்குகள் விபத்து எச்சரிக்கை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இது விபத்து குறித்து ரைடரின் 3 அவசர தொடர்புகளுக்குத் தெரிவிக்கிறது. இதன் மூலம் எதிர்பாராத மோசமான சம்பவங்களில் ரைடர் சரியான நேரத்தில் உதவி பெறுவதை உறுதிசெய்யும்.
மற்றொரு புதுப்பிப்பு ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் ஆகும், இது அப்பாச்சி RTR 160 4Vக்கு புதியது என்றாலும் RTR 200 4Vல் ஏற்கனவே இருந்தது. TVS Apache ஆர்.டி.ஆர் 160 4வி இன் மைலேஜ் லிட்டருக்கு 49.80 கிமீ ஆகும், அதே நேரத்தில் ஆர்.டி.ஆர் 200 4வி மைலேஜ் லிட்டருக்கு 37 கிமீ ஆகும்.
அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி பைக் பிளாக் எடிசன் ரூ.1,28,490க்கும் (எக்ஸ்-ஷோரூம்), டாப் வேரியன்டான டிஎஃப்டி + புரோஜெக்டர் ஹெட்லைட் வேரியன்ட் ரூ.1,47,990 என்ற விலைக்கும் விற்பனைக்கு வருகிறது. அதேசமயம் ஆர்.டி.ஆர் 200 4வி யூஎஸ்டி + எல்சிடி வேரியன்ட் ரூ.1,53,990க்கும், டாப் வேரியன்ட் டிஎஃப்டி + புரோஜெக்டர் ஹெட்லைட் வேரியன்ட் ரூ.1,59,980 என்ற விலையிலும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆர்.டி.ஆர். 160 4வி மற்றும் ஆர்.டி.ஆர். 200 4வி புதிய மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கும் அதேவேளையில், இந்த பைக்குகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.