
மல்டிபேக்கர் பங்கு என்பது அவற்றின் அசல் முதலீட்டு மதிப்பை விட அதாவது ஆரம்ப முதலீட்டை விட பல மடங்கு வருமானத்தை வழங்கும் ஒரு பங்காகும். இவை பெரும்பாலும் 100% அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்டும் பங்குகளாகும். இந்த பங்குகளை அடையாளம் காண்பது என்பது நிலையான வளர்ச்சி, போட்டி நன்மையை அடையாளம் காண்பது மற்றும் வலுவான மேலாண்மை ஆகியவற்றைக் கொண்ட நிறுவனங்களைத் தேடுவதை உள்ளடக்கியது.
மல்டிபேக்கர் பங்குகள் உள்ள நிறுவனங்களை அடையாளம் காண்பது என்பது மிகவும் சவாலானது. மல்டிபேக்கரை தேர்ந்தெடுப்பதற்கென்று திட்டவட்டமான சூத்திரங்கள் எதுவும் இல்லை என்றாலும் முக்கிய நிதி அளவீடுகளை பகுப்பாய்வு செய்வது சாத்தியமான நிறுவனங்களை கண்டறிவதற்கு உதவும்.
இந்த மல்டிபேக்கர் பங்குகள் பெரும்பாலும் உயர் வளர்ச்சித் துறைகளில் அல்லது தனித்துவமான போட்டித் தன்மை கொண்ட நிறுவனங்களில் காணப்படுகின்றன. இவற்றை எப்படி அடையாளம் காண்பது என்று பார்க்கலாம்.
தொழில்துறை போக்குகளை கவனிப்பது:
குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குத் தயாராக உள்ள துறைகளை கண்டறிவதும், அந்த தொழில்களுக்குள் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலாண்மையை மதிப்பிடுவது:
நிர்வாகக் குழுவின் தரம் மற்றும் அதனுடைய அனுபவத்தை மதிப்பிடலாம். வலுவான நிர்வாக நடைமுறைகள், அவற்றின் தெளிவான தொலைநோக்குப் பார்வை மற்றும் செயல்படுத்துதலில் உள்ள திறமை ஆகியவற்றை கவனிப்பது மிக முக்கியமானது. எனவே நிர்வாகக் குழுவின் மேலாண்மையை மதிப்பிடுவது அவசியமாகிறது.
நிதிகளை பகுப்பாய்வு செய்வது:
ஒரு நிறுவனத்தின் வலுவான வருவாய் வளர்ச்சி நிலையை அறிவதும், நிலையான லாபம் அதாவது ஒரு பங்குக்கு அதிக வருவாய் கொண்ட நிறுவனங்களை, பெரும்பாலும் 100% அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்டும் பங்குகளை உடைய நிறுவனங்களை அடையாளம் காண்பதும், குறைந்த கடன் பங்கு விகிதங்களைக் கொண்ட நிறுவனங்களைத் தேடுவதும் அவசியமாகும்.
மல்டிபேக்கர் பங்குகள் கணிசமான வருமானத்தை வழங்குவதற்கு பெரும்பாலும் நேரம் எடுக்கும். எனவே பொறுமை காப்பது மிகவும் அவசியம்.
குறைந்த கடன்-பங்கு விகிதம்:
கடன் பங்கு விகிதம் என்பது நிறுவனத்தின் தற்போதைய கடனை அதன் பங்குடன் ஒப்பிட்டு, நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்யும் ஒரு முக்கிய அளவீடாகும். குறைந்த விகிதங்களைக் கொண்ட வணிகங்கள் நிதி ரீதியாக வலுவானவை மற்றும் தொழில்துறை மந்தநிலையின் பொழுது குறைந்த அபாயங்களை எதிர்க்கொள்ளும். எனவே குறைந்த கடன் பங்கு விகிதத்தை பகுப்பாய்வு செய்வது முக்கியம்.
போட்டி நன்மையை அடையாளம் காண்பது:
நிலையான போட்டி நன்மையைக் கொண்ட நிறுவனங்களைத் தேடுவது அவசியம். வலுவான பிராண்ட் அங்கீகாரம், அவற்றின் ஆதிக்கம் செலுத்தும் சந்தை நிலை, தனியுரிமை தொழில்நுட்பம் போன்ற நிலையான போட்டி நன்மைகளைக் கொண்ட நிறுவனங்களை தேடுவது அவசியம்.
தொழில்துறை போக்குகளை கவனிப்பது:
குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு தயாராக உள்ள துறைகளைக் கண்டறிவதும், அவற்றின் தொழில்துறை போக்குகளை கவனிப்பதும் சிறந்தது. அப்படி குறிப்பிட்ட வளர்ச்சிக்குத் தயாராக உள்ள துறைகளைக் கண்டறிந்தவுடன் அந்த தொழில்களுக்குள் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதும் அதிக லாபத்தைத் தரும்.
எந்த ஒரு பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள், வளர்ச்சித் திட்டங்கள், சந்தை நிலவரம் போன்றவற்றை ஆராய்வது அவசியம்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கும், இடர் சகிப்புத்தன்மையை மதிப்பிடுவதற்கும் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறலாம்.
மல்டிபேக்கர் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரியிடம் கலந்தாலோசிப்பதும், பங்குகள் மற்றும் சந்தை பற்றிய முழுமையான புரிதலும் அவசியம்.