200cc பிரிவில் மாஸ் காட்டும் புதிய ‘Yamaha YZF-R2’: விலை மற்றும் சிறப்பம்சங்கள்...

யமஹா நிறுவனத்தின் புதிய ஒய் இசட் எப்-ஆர் 2 (Yamaha YZF-R2) ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை அறிந்துகொள்ளலாம் வாங்க...
Yamaha YZF-R2 image
Yamaha YZF-R2 imagecredit-bikedekho.com
Updated on

மஹா மோட்டார் நிறுவனம் (Yamaha Motor Co., Ltd.) 1955-ம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்ட ஒரு முன்னணி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். இது மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், படகுகள் மற்றும் கடல்சார் இயந்திரங்கள் (Marine engines) போன்ற தயாரிப்புகளுக்கு உலகளவில் மிகவும் பிரபலமானது.

டொரகுசு யமஹா என்பவரால் 1887-ல் இசைக்கருவிகள் தயாரிப்புடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 1955-ம் ஆண்டில் மோட்டார் வாகன உற்பத்தித்துறையில் காலடி வைத்தது.

இந்தியாவில் யமஹா (Yamaha) நிறுவனம் அதன் ஸ்போர்ட்டி வடிவமைப்பு, நம்பகமான என்ஜின் மற்றும் சிறந்த செயல்திறனுக்காகப் பெயர்பெற்ற மிகச் சிறந்த இருசக்கர வாகனங்களை வழங்கி வருகிறது. இதன் உற்பத்தி ஆலைகளில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில் யமஹா நிறுவனம் புதிய ஒய் இசட் எப்-ஆர் 2 (Yamaha YZF-R2) ஸ்போர்ட்ஸ் பைக்கை (யமஹா பைக்) இந்திய சந்தையில் கடந்த மாதம் அறிமுகப்படுத்திய நிலையில் அந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, யமஹாஒய் இசட் எப்-ஆர் 2 ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.2.30 லட்சம் தொடக்க எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலையில் அறிமுகமாகி உள்ளது. யமஹா YZF-R2 என்பது யமஹா நிறுவனத்தால் 200cc செக்மெண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு புத்தம் புதிய பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும். இது புகழ்பெற்ற யமஹா R-சீரிஸ் பைக்குகளின் டிசைன் அம்சங்களைக் கொண்டுள்ளது.

உலகளவில் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமாகி உள்ள இந்த பைக்கில் 204 சிசி லிக்விட் கூல்டு (Liquid-Cooled), DOHC, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது.

இது 26.5 பிஎஸ் (PS) பவரைவும், 19.1 (Nm) நியூட்டன் மீட்டர் டார்க்கையும் (Torque) வெளிப்படுத்துகிறது.

Yamaha YZF-R2|யமஹா பைக்
Yamaha YZF-R2|யமஹா பைக்image credit-zigwheels.com

என்ஜின் உராய்வை குறைக்க யமஹா ஆர்1 பைக்கில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட டைமண்ட்-லைக் கார்பன் பூச்சும் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 37 mm அப்சைடு டவுன் (USD) ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-Channel ABS) இடம் பெற்றுள்ளன. ஸ்ட்ரீட் (Street), ஸ்போர்ட் (Sport) மற்றும் ரெயின் (Rain) என மூன்று ரைடிங் மோடுகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (TCS), 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் (Assist & Slipper Clutch), டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியுடன் 5 அங்கல கலர் TFT டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. மிட் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் பை-டைரக்ஷனல் குயிக் ஷிப்டர் உள்ளது.

ஆர் சீரிஸ் பைக்குகளுக்கே உரிய முழுமையான பேரிங், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல் (LED DRLs) விளக்குகள், ஸ்பிளிட் சீட் ஆகியவை ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்: ‘Bajaj Dominar 400’-ல் அதிரடி மாற்றங்கள்!
Yamaha YZF-R2 image

யமஹா YZF-R2 பைக் மொத்தம் 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

பேஸ் வேரிண்ட் (Base Variant) ரூ.2.30 லட்சத்திலும், மேட் பிளாக் & டார்க் புளூயிஷ் கிரே நிறங்களிலும் கிடைக்கிறது.

குயிக் ஷிப்டர் வேரியண்ட் (Quickshifter Variant) ரூ.2.39 லட்சத்திலும் மற்றும் ரேசிங் புளூ & மேட் ஒயிட் பேர்ல் நிறங்களில் கிடைக்கிறது.

அட்ஜஸ்ட்பிள் சஸ்பென்ஷன், ஸ்மார்ட் கீ உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கொண்ட ஆர்2 எம் டாப் வேரியண்டின் (Top Variant) மெட்டாலிக் கிரே நிறம் மற்றும் ஸ்மார்ட் கீ சிஸ்டம் வசதியுடன் ரூ.2.53 லட்சத்தில் கிடைக்கிறது.

இந்த பைக்கில் R15 பைக்கில் உள்ள டெல்டாபாக்ஸ் பிரேமிற்கு பதிலாக புதிய டயமண்ட் டைப் ஸ்டீல் பிரேம் (Steel Tube Diamond Frame) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
புது பைக் வாங்க போறீங்களா? நீங்க ஏமாறாமல் இருக்க கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Yamaha YZF-R2 image

இந்த பைக்கின் மொத்த எடை (Kerb Weight) வெறும் 149 கிலோ ஆகும். இதனால் இந்த செக்மெண்டில் மிக லேசான பைக்காக இது விளங்குகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com