2023ல் ரஜினி, கமல், விஜய், அஜித்  படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

2023ல் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். அவரது பாடல்கள் இன்றைய இளைஞர்களை எளிதில் கவரும் விதத்தில் இருப்பதால் முன்னணி இயக்குனர்கள் சிலரும், நடிகர்கள் சிலரும் அனிருத்தை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான “3” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்திரன்.  இப்படத்தில் இடம்பெற்ற ‘வொய் திஸ் கொலவெறி டி’ என்ற பாடலின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பிரபலமடைந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம்ம ஹிட் ஆனது. வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்தமாக ஒரு ஆல்பம் ஹிட் மற்றும் படத்தின்  பின்னனி இசையும் ஹிட் அடித்தது அனைவரையும் இவரின் பக்கம் இழுத்தது.

 இசையமைப்பாளராக அறிமுகமாகி, பாடகராகவும், வெள்ளித்திரையில் சில கௌரவ தோற்றங்களில் தோன்றி நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் இளமை துள்ளும் இசையமைப்பாளர். மிக சிறிய வயதிலேயே வெற்றியை எட்டி பிடித்தவர். இளைஞர்களின் பல்ஸ் பிடித்து மியூசிக் போடும் கம்போசர். யூத் ரசிகர்களும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அனிருத்திற்கு எப்போதுமே உண்டு.

 காதலின் வெவ்வேறு நிலைகளை எடுத்துக்கூறுமாறு படத்தில் அமைந்திருக்கும் மெலோடி பாடல்கள் இன்று வரை அனைவரின் ப்லே லிஸ்டிலும் இடம்பிடிக்கிறது,

 இந்த ஆண்டில் வெளிவர இருக்கும் சில முக்கிய பெரிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர்.

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' விஜய்யின் 67வது படம், அஜித்தின் 62வது படம், தனுஷின் 50வது படம் ஆகிய முக்கிய தமிழ்ப் படங்கள் அனிருத்தின் கைவசம் உள்ளது.

மேலும், ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கும் 'ஜவான்' படத்திற்கும், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள 30வது படத்திற்கும் அனிருத் தான் இசை.

ஏற்கெனவே யு டியுபில் அனிருத்தின் பாடல்களுக்கு அதிகப் பார்வைகள் கிடைப்பது வழக்கம். இந்த வருடம் அவருடைய முக்கிய படங்கள் வருவதால் இந்த வருடத்திலும் அவருடைய பாடல்கள் சாதனை படைக்க வாய்ப்புள்ளது என பல இசை கம்பெனிகள் கருதுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com