சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன்! கெத்து காட்டும் சினிமா வியாபாரம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன்! கெத்து  காட்டும் சினிமா வியாபாரம்!

சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் மாவீரன். இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில் ப்ரோமோ பணிகள் குழுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான் சிவ கார்த்திகேயன். அதற்கு முன் வெளியான முழு திரைப்படத்தில் காமெடி நடிகராக தனுசுடன் இணைந்து நடித்திருப்பார். எதிர்நீச்சல் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து இன்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் சிவாகார்த்திகேயன் . விஜய் மற்றும் அஜித்திற்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் இவர் என்றாலும் மிகையாகாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்திருப்பவர் அவர்.

மண்டேலா திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்ற மடோனா அஸ்வின் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் சிவா கார்த்திகேயனுடன் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் மிஸ்கின் யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கவுண்டமணி சுனில் மற்றும் சரிதா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு பரத் ஷங்கர் என்பவர் இசையமைத்திருக்கிறார். இம்மாத இறுதியில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான ரிலீஸ் தேதியை பற்றிய அறிவிப்பு எதையும் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிடவில்லை. சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் இன்னும் உச்சத்திலேயே இருக்கிறது என்பதை இத் திரைப்படத்திற்காக வியாபாரம் காட்டுகிறது.

அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து ஓடிடிஉரிமைகளை வாங்கியுள்ள நிலையில் சன் டிவியும் இதன் சேட்டிலைட் உரிமைகளை மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் தியேட்டர் ரிலீசிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. சிவா கார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் 83 கோடி ரூபாய்க்கு தியேட்டர்களுக்கு amவிற்கப்பட்டிருக்கிறது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com