KGF chapter  2 திரைப்படம்: ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு பரிசு!

KGF chapter  2 திரைப்படம்: ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு பரிசு!

-ராகவ் குமார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில்  பிற மாநில  மொழிப் படங்கள் ஆளுமை செய்யும் காலகட்டம் இதுபோல் தோன்றுகிறது. அந்தளவு தமிழ் ரசிகர்கள் மலையாள சினிமாவின் அழகியலையும், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்டதையும், கன்னட சினிமாவின் கதை சொல்லும் விதத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் இந்த மாற்றத்தை நமது தமிழ் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் புரிந்து கொண்டார்களோ இல்லையோ.. பிற மாநில தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் நமது ரசிகனின் உணர்வை புரிந்து கொண்டு தங்களது படைப்புகளை இங்கே இறக்க ஆரம்பித்து விட்டார்கள்.

  அந்த வகையில் இம்மாதம் இயக்குனர் ராஜமவுலியின்  RRR படம் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றதென்றால், அடுத்த மாதம் வெளியாக தயாராக உள்ளது KGF chapter  2  படம்! சமீபத்தில் KGF chapter  2 படத்தின் ட்ரைலரை சமீபத்தில் வெளியிட்டு உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு  யாஷ் நடித்து வெளியான  kGF படம் இங்கே மிக பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. KGF chapter  2 படத்தின்  ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் 109 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

KGF chapter  2 தென்னிந்திய மொழிகள் அனைத்திலும், ஹிந்தியிலும் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளதாம். அந்த வகையில் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக அமையபோகிறது என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com