துணிவுடன் மோதப் போகும் வாரிசு?

Varisu - Thunivu
Varisu - Thunivu

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளால், வாரிசு ரிலீஸ் தள்ளிப்போகும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது, வாரிசு பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.

விஜய்யின் போர்ஷன் எல்லாம் முடிந்துவிட்டதால், அவர் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார் . விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தாலும், இன்னும் சில பகுதிகள் மட்டும் வரும் 9ம் தேதி வரை படமாக்கப்படவுள்ளதாம். டிசம்பர் 9ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்கிறார்கள்.

வாரிசு செகண்ட் சிங்கிளையும் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வாரிசு படத்தின் ட்ரெய்லர் ப்ளஸ் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் என்பதால், விஜய் லண்டன் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

அதனால், வாரிசு ட்ரெய்லரை ஜனவரி 1ம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்
விஜய்

விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு ரகளமிறங்குகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் விஜய்யும் அஜித்தும் மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பதில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில், விஜய் ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com