காதல், சென்டிமெண்ட் போன்ற படங்களுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைப்போலவே ஹாரர் படங்களை பார்த்து ரசிக்க ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹாரர் படங்களை பார்க்கும் போது கிடைக்கும் திரில்லான அனுபவம், விருவிருப்பான திருப்பங்கள், பதற்றம் மற்றும் Jump scare போன்றவை இந்த வகை படங்களை ரசிக்க தூண்டுகிகின்றன. இந்த பதிவில் OTT தளத்தில் கட்டாயம் காண வேண்டிய 5 சிறந்த ஹாரர் படங்களை பற்றி காண்போம்.
2025 ல் தெலுங்கில் வெளியான சுபம், காமெடி கலந்த ஹாரர் படமாகும். இக்கதையை நகைச்சுவையாக எடுத்து செல்ல முயற்சித்திருந்தாலும், பெண்களை அடிமைகளாக கருதும் ஆண்களுக்கு சவுக்கடி கொடுப்பது போன்ற சிறப்பான கருத்தையும் முன்வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதையின்படி 'பீமிலி' என்ற கிராமத்தில் இருக்கும் வீடுகளில் இறந்துப்போன பாட்டிகளின் ஆவிகள் சரியாக இரவு 9 மணிக்கு 'ஜென்ம ஜேன்ம பந்தம்' என்ற நாடகத்தை பார்ப்பதற்காக அந்த வீடுகளில் இருக்கும் பெண்களின் உடலில் இறங்குவார்கள். இரவு 9 மணி ஆனாலே அந்த கிராமத்தில் இருக்கும் அனைத்து திருமணம் ஆன பெண்களுக்கும் பேய் பிடித்து சீரியல் பார்க்க தொடங்கி விடுவார்கள்.
புதிதாக திருமணம் ஆன கேபிள் டீவி ஆப்ரேட்டராக இருக்கும் இப்படத்தின் கதாநாயகனின் மனைவியின் உடலிலும் ஆவி புகுந்துவிடும். இந்த பிரச்னையை சரிசெய்வதற்காக ஹீரோவே புதிதாக ஒரு சீரியலை இயக்கி தன்னுடைய கேபிள் டீவியில் ஒளிப்பரப்புவான். இறுதியில் அந்த கிராமத்தில் உள்ள பெண்களின் உடலில் இருந்து ஆவிகள் சென்றதா இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். இந்த படம் OTT தளமான Jio hotstar ல் இருக்கிறது. கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்.
2022ல் ஆஸ்ட்ரேலியன் ஹாரர் படமாக வெளியான Talk to me 4.5 மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 92 மில்லியன் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்தது. இப்படத்தின் கதையின்படி, சில டீன் ஏஜ் நண்பர்கள் தங்களுக்கு கிடைத்த வித்தியாசமான, அமானுஷ்யம் நிறைந்த கையின் மூலமாக ஆவிகளுடன் தொடர்ப்பு கொள்ள முடியும் என்பதை அறிந்துக் கொண்டு அதை வைத்து விளையாட்டாக ஆவிகளுடன் ஒவ்வொருவராக பேச ஆரம்பிப்பார்கள்.
ஒரு கட்டத்தில் விளையாட்டு விபரீதமாக மாறி கொடூரமான ஆவியிடம் மாட்டிக்கொள்வார்கள். அந்த பிரச்னையில் இருந்து எப்படி தப்பித்தார்கள். அந்த அமானுஷ்யமான கை எங்கிருந்து வந்தது என்பதை பற்றி விரிவாக படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த படம் Netflix ல் இருக்கிறது. ஒரு திரிலிங்கான படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் இந்த படத்தை பாருங்கள்.
2022ல் மலேசியன் தமிழ் படமாக வெளியானது தான் பூச்சாண்டி. இந்த படம் வித்தியாசமான கதையையும், விருவிருப்பான திருப்பங்களையும் கொண்டது. கதையின்படி தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் ஜெர்னலிஸ்ட் ஆன கதாநாயகன் உண்மையாக நடந்த பேய் கதைகளை பற்றி கேட்டு சேகரித்துக் கொண்டிருப்பான். அப்போது அங்கே சங்கர் என்ற நபரை சந்திப்பான். அவர் தன்னுடைய நண்பர்களுக்கு நடந்ததாக கூறிய அமானுஷ்ய கதை ஹீரோவை வெகுவாக கவர்ந்துவிடும்.
அன்பு என்னும் நபருக்கு பழைய காசுகளை சேகரிக்கும் பழக்கம் இருக்கும். ஒருநாள் இந்த நண்பர்கள் அனைவரும் அந்த பழைய காசை வைத்து Ouija board விளையாடும் போது ஒரு அமானுஷ்யமான ஆவியிடம் மாட்டிக்கொள்வார்கள். அந்த ஆவியிடமிருந்து தப்பித்தார்களா? அந்த பழமையான நாணயத்தின் பின் இருக்கும் வரலாறு போன்றவற்றை சுவாரஸ்யமாக மீதி கதையில் சொல்லியிருப்பார்கள். இந்த படம் Netflixல் இருக்கிறது. தாராளமாக பார்த்து ரசியுங்கள்.
2024 ல் வெளியான ஆங்கில ஹாரர் திரைப்படமான The substance திரைப்படம்18 மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 82 மில்லியன் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்தது. டீ.வியில் பிரபலமாக இருந்த ஹீரோயினுக்கு வயதான காரணத்தால், அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டு இளமையான பெண்ணை அந்த வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று ஹீரோயினுடைய உயர் அதிகாரி முடிவெடுத்திருப்பார். இதனால் மனவிரக்தியில் இருந்த ஹீரோயினுக்கு தான் இளமையாக மாறுவதற்கு ஒரு Substance கிடைக்கும்.
அதில் போட்டிருக்கும் விதிமுறைகளை கடைப்பிடித்தால் தன்னுடைய இளமையான வெர்ஷனாக மீண்டும் வாழ முடியும். ஆனால், விதிமுறைகளை கடைப்பிடிக்க மறந்தால் விபரீதம் ஏற்படும். ஹீரோயின் அந்த Subtanceஐ பயன்படுத்தியதால் என்னனென்ன பிரச்னைகளை எதிர்க்கொண்டார் என்பதே மீதி கதை. மிகவும் பரப்பரப்பான திருப்பங்களைக் கொண்ட இந்த படத்தை Amazon prime, MUBI போன்ற OTT தளங்களில் காண முடியும்.
2025ல் வெளியான தமிழ் ஹாரர் திரைப்படம் தான் எமதாதகி. இந்தக்கதையில், ஒரு கிராமத்தில் திருவிழா சமயத்தில் ஊர் தலைவரின் பெண் தற்கொலை செய்துக் கொள்வார். அவர் தற்கொலை செய்துக் கொண்டதற்கு பலரும் பல காரணங்களை முன் வைப்பார்கள். வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல முயற்சிக்கும் போது அந்த உடலை கொஞ்சம் கூட நகர்த்த முடியாது.
ஊர் மக்கள் சேர்ந்து அந்த பெண்ணின் உடலை தூக்க முயற்சித்தும் நகர்த்த முடியாது. அதற்கு பதில் அமானுஷ்யமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருக்கும். இதனால் அந்த பெண்ணின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் பேசிக்கொள்வார்கள். கடைசியில் அந்த பெண்ணின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தார்களா? ஏன் அந்த பெண்ணின் உடலை நகர்த்த முடியவில்லை என்ற கேள்விக்கு எல்லாம் விடையை சொல்லி படத்தை முடித்திருப்பார்கள். இந்த படம் Aha tamil என்ற OTT தளத்தில் இருக்கிறது.