வெப்சீரிஸில் கலக்கும் ஜோதிகா... மிரட்டும் டீஸர்!

Jyothika
Jyothika

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா கடந்த சில வருடங்களுக்கு பிறகு கம் பேக் கொடுத்தார். என்னதான் படம் நன்றாக இருந்தாலும் அவ்வளவு ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு வரவில்லை. ஆனால் மற்ற மொழி படங்களில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். சமீபத்தில் மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'காதல் தி கோர்' அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தது. தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகி வரும் ஷைத்தான் பட டிரைலரும் வெளியாகி திகிலூட்டியது. தமிழில் போதிய வரவேற்பு இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில், பாலிவுட்டுக்கு சென்ற நடிகை ஜோதிகா நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உருவாகி உள்ள 'Dabba Cartel' எனும் புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியுடன் இணைந்து இந்த வெப்சீரிஸில் ஜோதிகா நடித்துள்ளார். அதன் டீசரை தற்போது நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி..!
Jyothika

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடியில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ரசிகர்கள் வெப் சீரிஸ்களுக்கு அதிக வரவேற்பை அளித்து வருகின்றனர். தமிழில் வெளியான அயலி, சுழல் உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது ஜோதிகாவின் வெப் சீரிஸ்-ம் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தை போல இந்த வெப்சீரிஸில் பெண்கள் எப்படி டிபன் பாக்ஸ் மூலம் போதைப் பொருட்களை கடத்துகின்றனர் என்பதே கதையாக உருவாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com