ஓடிடியில் வெளியாகும் சமந்தாவின் ‘சுபம்’- எப்போ தெரியுமா?

நடிகை சமந்தாவின் தயாரிப்பில் வெளிவந்த ‘சுபம்’ படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
Samantha's subham movie
Samantha's subham movie
Published on

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ், பாலிவுட், தெலுங்கு படங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. தனது அழகு மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் சமந்தா. 2010-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகை சமந்தா.

விஜய்தேவர கொண்டா உடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வந்தார். இந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும், சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். ஆக்ஷன் ஹீரோயினாக இதில் கலக்கியிருந்தார்.

இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் நடிகையாக வைத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தயாரிப்பாளராக மாறிய சமந்தா...புதிய நிறுவனம் தொடக்கம்!
Samantha's subham movie

அத்துடன் இவர் புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு போட்ட குத்தாட்டத்திற்கு பொடிசு முதல் பெரிசு வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம். இவர் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் விவாகரத்து மற்றும் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சில காலம் படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர், விரைவில் மிகப்பெரிய படங்களுடன் கம் பேக் கொடுக்கவுள்ளார்.

நடிகை சமந்தா 2023-ம் ஆண்டு "ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures)" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் கீழ் ‘சுபம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து, தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இந்த படம் கடந்த மேமாதம் 9-ம்தேதி வெளியான நிலையில் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

பிரவீன் காந்த்ரேகுலா இயக்கியுள்ள இந்த படத்தில் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவாணி, சரண் பெரி மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார் சமந்தா.

இதையும் படியுங்கள்:
தயாரிப்பாளராக சமந்தா - ஓபன் டாக்!
Samantha's subham movie

‘சுபம்’ பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டாத நிலையில் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் வரும் ஜூன் 13ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது.

தெலுங்கு ரசிகர்கள் ‘சுபம்’படத்தின் ஓடிடி வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் மிஸ் பண்ணாம பாருங்க..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com