குவியும் வாழ்த்துக்கள்..! 60 வயதில் சாதனை படைத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகர்..!!

60 வயதானாலும் சாதிக்க வயது தடையில்லை என்பதை பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நிரூபித்துள்ளார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகர்.
Pandian Stores 2
Pandian Stores 2
Published on

சமீபகாலமாக சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்கள் விளையாட்டு துறைகளில் கவனம் செலுத்தி வருவதுடன் தற்போது பல்வேறு தேசிய போட்டிகளில் களம் இறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சாதனை புரிந்த அனைவரும் 50 வயதை தாண்டியவர்கள். இதன்மூலம் சாதிக்க வயது தடை இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். நடிகர் அஜித் கார் ரேசின் மீதான ஆர்வத்தால் சினிமாவிற்கு சற்று இடைவெளி விட்டு கார் ரேசில் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். அதேபோல் சர்வதேச அளவில் நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் 4 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகை பிரகதி.

அந்த வரிசையில் தற்போது 60 வயதான நடிகரும் இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லீங்க. நம்ம அஜய் ரத்தினம் தான். அவர், சமீபத்தில் நடைபெற்ற 34-வது தேசிய பெஞ்ச் பிரஸ் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
நடிகை TO பவர் லிஃப்டிங்: 4 பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகை..!
Pandian Stores 2

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் காவல்துறை அதிகாரி வேடம் அல்லது வில்லன் வேடம் என்றால் கூப்பிடுங்க நடிகர் அஜய் ரத்னத்தை என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு அவரது உயரமும், உயரத்திற்கு ஏற்ற எடையும் அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அஜய் ரத்னம் 1989ம் ஆண்டு வெளியான நாளை மனிதன் என்ற திகில் படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இவர் ஐந்து மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மர்மதேசம் (விடாது கருப்பு), சித்தி, அரசி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் தன் தனித்துவமான நடிப்பால் முத்திரைப்பதித்து வருகிறார். தற்போது இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரில் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், திரையில் மட்டுமல்ல... விளையாட்டு அரங்கிலும் இவர் உண்மையான ஹீரோ தான் என்பதை நிரூபித்துள்ளார். சினிமா - சீரியல்களுக்கு மட்டுமல்ல... ஃபிட்னெஸுக்கும் பெயர் போன அஜய் ரத்னம், அன்றாடம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்கென ஒதுக்கிவிடும் வழக்கத்தை இன்றளவும் கொண்டிருக்கிறார்.

AJAY RATHNAM
AJAY RATHNAM

கடந்த ஜனவரி 9-ம்தேதி நடந்த தமிழ்நாடு அளவிலான பவர்லிஃப்ட்டிங் பென்ச் மற்றும் ஜனவரி 10-ம்தேதி நடந்த 34-வது National Bench Press Weight Lifting Championship போட்டிகளில் கலந்துகொண்டு, தங்கம் வென்றுள்ளார்(இருபோட்டிகளிலும் தங்கம்) நடிகர் அஜய் ரத்னம். 60 வயதிலும் தான் இந்த வெற்றியை பெறுவதற்கு காரணம், ஒழுங்கான தன்னுடைய தீவிர பயிற்சிகளே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

சினிமா, விளையாட்டு மட்டுமின்றி ஒரு மோட்டிவேஷன் ட்ரெயினராகவும் சாதித்து வருகிறார் அஜய் ரத்னம். குழந்தைகளுக்கு கல்வியை எளிமையாக கற்றுக்கொடுப்பதற்காகவே, ஸ்டோன் டு டைமண்ட் என்கிற அகாடமியை (Stone To Diamond Academy) தொடங்கி, அதன் மூலம் தமிழக குழந்தைகளுக்கு கல்வியை எளிமைப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் புது நடிகை! யார் தெரியுமா?
Pandian Stores 2

60 வயதில் தங்கம் வென்று சாதனை புரிந்த அஜய் ரத்தினத்திற்கு சோசியல் மீடியாவில் பல பிரபலங்களும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com