விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியா தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட முடிவெடுக்கிறார். இதுதெரிந்த ஈஸ்வரி, இப்படி செய்ய அசிங்கமாக இல்லையா என்பதுபோல் பேசுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், கோபிக்கு மறுபடியும் பாக்கியாவை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று ஈஸ்வரி முடிவு எடுத்து விட்டார். அதனால் கோபியை கூப்பிட்டு உனக்கும் பாக்கியாவுக்கும் நான் மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் உனக்கு சம்மதமா என்று கேட்கிறார். கோபி வேண்டாம் என்று மறுப்பு சொல்லவும் இல்லை, ஓகே என சம்மதமும் தெரிவிக்கவில்லை.
இந்த விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய ஈஸ்வரி பாக்கியாவிடம் பேசுகிறார். அதே நேரத்தில் எப்படி பேசுவது பாக்கியா எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியாத நிலையில் வாய்க்கு வந்தபடி உளறிவிட்டு அந்த இடத்தில் இருந்து ஈஸ்வரி எஸ்கேப் ஆகி விடுகிறார்.
எழில் மற்றும் செழியனிடம் எப்படியாவது பேசி சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்து, அவர்களிடமும் வாங்கிவிட்டார்.
அடுத்து கடைசியாக பாக்கியாதான் இருக்கிறார். அவரிடம் எப்படி சொல்வது என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் பாக்கியா ஒரு வேலை செய்கிறார்.
அதாவது தனது பிறந்தநாளை பற்றி மேனேஜரிடம் கூறிக்கொண்டிருக்கும்போது செல்வி வந்து பாக்கியாவிடம் பேசுகிறார். நானே எனது பிறந்தநாளுக்கு சினிமாலாம் போவேன். நீ ஒரு தொழிலதிபர். கொண்டாடலாம்ல அக்கா என்று கேட்கிறார்.
உடனே பாக்கியா, ஆமாம் நான் ஏன் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய தயாராகி விட்டார்.
தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைக்க லிஸ்ட் தயார் செய்கிறார். கேக் கட்டிங் மற்றும் உணவு சமைத்து போடுவது என பக்கா ப்ளான் செய்கிறார்.
இனியா கோபியை கிப்ட் வாங்க கடைக்கு அழைக்கும்போதுதான் இந்த விஷயம் ஈஸ்வரிக்கு தெரிகிறது. பாக்யா கடைக்கு போயிட்டு வந்து புதுசாக வாங்கின புடவையை ஈஸ்வரிடம் காட்டுகிறார். உடனே ஈஸ்வரி நீ என்ன சின்ன பிள்ளையா பிறந்த நாள் கொண்டாட போகிறாய். எப்படி எல்லாரும் முன்னாடியும் வெக்கமே இல்லாமல் கேக் கட் பண்ண போகிறாய். இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா என்று கேட்கிறார். அதற்கு நான் எந்த தப்பும் பண்ணவில்லையே எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் பண்ணுகிறேன் என்று சொல்லி ஈஸ்வரியை கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார்.
பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாக்கியா தலையில் பெரிய குண்டை தூக்கி போடுகிறார் ஈஸ்வரி. அதாவது இனி பாக்கியாவும் கோபியும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழப் போகிறார்கள் என்று கூறுகிறார். உடனே பாக்கியா கடும்கோபத்துடன் பேசிவிட்டு செல்கிறாள்.