பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மூலம் பல திருப்பங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது இனியாவின் மாமனார் பாக்கியாவின் ரெஸ்டாரன்டை பிடுங்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார்.
ஆகாஷை விரும்பிய இனியாவின் மனதைப் பற்றி கவலைப்படாமல், கோபி எதேதோ சொல்லி ஒரு பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், இங்குதான் சீரியலின் அடுத்த ட்ராக் ஆரம்பித்தது. இனியாவின் மாமனார் பாக்கியாவிற்கு தொல்லைக் கொடுக்கும் பல வேலைகளை செய்து வருகிறார்.
இனியாவின் மாமனாரான சுதாகர் தனது மகனை பாக்கியா குடும்பத்தின் மாப்பிள்ளையாக்கி, இனியாவின் ஒரு ரெஸ்டாரன்டை வாங்கிவிட்டார். இதனையடுத்து திருமணம் முடிந்த பிறகு, சுதாகர் வேலையை காண்பிக்க ஆரம்பித்தார். பாக்கிய உட்பட அனைவரையும் ரெஸ்டாரன்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். இதுகுறித்து வீட்டில் வந்து சொல்லும்போது, செழியன் மற்றும் கோபி சுதாகரிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் சுதாகர் அப்படியே ப்ளேட்டை மாற்றிப் போட்டார்.
இன்றைய எபிசோடில் பாக்கியா நேருக்கு நேர் சுதாகரிடம் கோபமாக பேசுகிறார், “நீங்கள் என்னிடம் ஒரு மாதிரி, என் வீட்டில் உள்ளவர்களிடம் வேறு மாதிரியும் நடிக்கிறீர்கள். உங்களை போல கேவலமான ஆளை நான் பார்த்ததே இல்லை என்று கோபப்பட்டு பேசுகிறார். சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமாகி பாக்யாவிடம் சண்டைப் போடுகிறார். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்ட் விஷயத்தில் அமைதியாக இருக்கிறேன். ஆனால், என் மகள் விஷயத்தில் விளையாடனும் என்று நினைக்காதீர்கள். நான் சும்மா விட மாட்டேன்.” என்று எச்சரித்துவிட்டு செல்கிறார்.
மற்றொரு பக்கம் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில் ரெஸ்டாரன்டில் தாத்தா போட்டோவை தூக்கிப் போட்டது குறித்து கூறுகிறார். ஆனால், ஈஸ்வரி அப்போதும் பாக்கியாவையே திட்டி பேசுகிறார். இதனால் எழிலுக்கு கோபம் வந்து அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, தன்னுடைய இன்னொரு ரெஸ்டாரண்டுக்கு சென்று ரொம்ப எமோஷனலாக ஃபீல் செய்து கொண்டிருக்கிறார். பின் சுதாகர், பாக்கியாவின் இன்னொரு ரெஸ்டாரன்ட் பற்றிய விவரத்தை அறிந்து அதை பறிக்க திட்டம் போடுகிறார்.