பாக்கியா கோபி ஆகியோரை சேர்த்து வைக்கும் பணியில் ஈஸ்வரி இறங்கியுள்ளார். ஈஸ்வரி மயுவை திட்டியதை அடுத்து ராதிகா ஒரு பெரிய முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். இன்றைய எபிசோடை பற்றி முழுமையாக பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், ஈஸ்வரி, கோபி மற்றும் பாக்கியாவை சேர்த்து வைப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார். அந்தவகையில், பாக்கியா கோபியிடம் உதவி செய்யுமாறு கேட்டதும், கோபி அதற்கு உதவி செய்வதாக கூறியதும் ஈஸ்வரிக்கு உற்சாகமாக இருக்கிறது. இதனால், செழியன் மற்றும் இனியாவை அழைத்து பாக்கியா பற்றி பேசினாலே கோபி முகத்தில் சந்தோஷம் தெரிவிதாக கூறி ஈஸ்வரி மகிழ்ச்சி அடைகிறார்.
இப்படியான நிலையில், கோபியிடம் காலேஜில் பங்க்ஷன் ஒன்று நடப்பதாக ஆயிரம் ரூபாய் கேட்கிறாள். அவரும் தர்றேன் என சொல்ல, பாக்கியா நான் கொடுத்துக்கிறேன் என்கிறார். உடனே ஈஸ்வரி அவனோட பொண்ணுக்கு கோபி கொடுக்க கூடாதா என கேட்கிறார்.
அதற்கு பாக்கியா நான் இவ்வளவு நாள் பார்த்துக்கிட்டேன்ல, அதேபோல் இப்பவும் நானே பார்த்துக்கிறேன். அதற்கு கோபி விடுங்கம்மா அவளே கொடுக்கட்டும். இனியா ட்ரெஸ் கேட்டா. அத நான் வாங்கி தந்துக்குறேன் என்று கோபி கூறுகிறார்.
அந்தசமயம் மயு அங்கு வருகிறார். நான் டிராயிங் போட்டில வின் பண்ணிட்டேன் என சந்தோஷமாக சொல்கிறார். அதற்கு அவன் உனக்கு என்ன கிப்ட் வேணும் என கேட்கிறார். அவள் எதுவும் வேண்டாம் என சொல்ல, ஏதாவது கேட்டே ஆகணும் என்கிறார்.
மயு பவுச் கேட்கிறாள். கோபி கிளம்பிவிட்டு வருகிறேன் என்று ஒருபக்கம் போக, மறுபக்கம் ஈஸ்வரி வந்து மயுவை கண்டப்படி திட்டுகிறார்.
அப்போது ராதிகா வர, அனைத்தையும் கேட்டுவிடுகிறார். அதேபோல் பாக்கியாவும் கேட்டுவிடுகிறார். அப்போது கோபி அங்கு வர்ற, அவனிடம் நாங்க போயிட்டு வர்றோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறாள். ஈஸ்வரி ஒன்றுமே நடக்காததை போல் பேசுகிறார்.
ஆனால். பாக்கியா ஈஸ்வரியை கண்டிக்கிறார். இதற்கிடையே ராதிகாவிடம் மயு மிகவும் சோகமாக பேசுகிறார். சீக்கிரமே இந்த பிரச்சனையை நான் சரி பண்றேன். இந்தளவு அவுங்க பேசுவாங்கன்னு நான் நினைக்கலை என சொல்லி சமாதானம் செய்கிறாள். வீடு திரும்பிய ராதிகா, கோபி வேறு விஷயங்களை பேசிக்கொண்டே இருந்ததால், அவர் எதுவும் பேசாமல் போய்விடுகிறார்.