
கோபியின் செயலால் கடுப்படைந்த பாக்கியா, அவரை வீட்டுக்கு போக சொல்லி வற்புறுத்துகிறார்.
பல பிரச்சனைகளை நினைத்து வருந்தி கொண்டிருந்த கோபிக்கு கடந்த வாரம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே பலருக்கும் போன் செய்த கோபி, பாக்கியாவிற்கு அழைப்பு விடுத்து உதவி கேட்டார். உடனே ஓடி சென்ற பாக்கியா கோபியை காப்பாற்றி மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அதோடு இல்லாமல் மனைவி என்று கையெழுத்திட்டு அவரின் அறுவை சிகிச்சைக்கு உதவினார். இதனை தொடர்ந்து கடுப்பான ஈஸ்வரி சண்டையிட்டு ராதிகாவிடம் இருந்து பிரித்து மகனை பாக்கியா வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதனால் கடுப்பான பாக்கியா தினமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை கோபியை பார்க்க வந்த ராதிகா மன வேதனையுடன் தான் திரும்பினார். கோபி மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து ஈஸ்வரி நீ கோபியை விவாகரத்து செய்துவிடு என கூறுகிறார். அவனுக்கு இப்போது பாக்கியாவை புடிக்கிறது எனவும் கூறுகிறார். இதனால் மனமுடைந்த ராதிகா அழுதபடி செல்கிறார்.
தொடர்ந்து இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் காபி போட்டு கொடுத்து கோபியை கவனித்த பாக்கியா 1 வாரத்தில் கிளம்பி விடுங்கள் என கூறுகிறார். ஈஸ்வரியின் டார்ச்சரால் தான் அழைத்து வந்ததாகவும், நீங்கள் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை எனவும் கூறுகிறார். இதையடுத்து மறுநாள், காலையில் எழுந்த கோபி, பாக்கியாவை பார்த்து பரிதாபப்பட்டு காபி போட்டு கொடுத்தார். ஆனால் கடுப்பான பாக்கியா அந்த காபியை கீழே ஊற்றிவிட்டார்.
இதையடுத்து தந்தையை பார்க்க வந்த மயூ, உள்ளே வர தயக்கப்பட்டு திரும்பி செல்ல முயல்கிறார். இதனை பார்த்த பாக்கியா, உள்ளே வா என கூப்பிடுகிறார். அதற்கு மயூ அம்மாவுக்கு தெரியாமல் வந்துட்டேன்,. பாட்டி திட்டுவாங்க என சொல்கிறார். நான் இனிமேல் எங்க அப்பாவ பாக்க முடியாதா, அவர் வரவே மாட்டாரா எங்க அம்மா வேற வீடு மாறலாம்னு சொல்றாங்க என கூறி வருத்தப்படுகிறார். அப்போது வந்த ராதிகா, இவரிடம் உனக்கு என்ன பேச்சு என திட்டுகிறார். மேலும், நீங்க எனக்கு ஆறுதல் சொல்லிட்டு கோபிக்கு சமைச்சு கொடுங்க, பார்க் கூட்டிட்டு போங்க என கூறிவிட்டு செல்கிறார்.
இதனால் கடுப்பான பாக்கியா, கோபியிடம் சென்று உங்களை ஒருவாரத்தில் கிளம்ப சொன்னேன்ல இப்போ சொல்றேன் 2-3 நாளுல கிளம்புங்க என கூறுகிறார். இதனால் ஷாக்கான ஈஸ்வரி, செழியன், இனியா என அனைவரும் பாக்கியாவை திட்டுகிறார்கள். மேலும் என் பையன் எங்கேயும் போகமாட்டான் அவன் இங்கேயே இருப்பான் என கூறுகிறார். இதற்கு பாக்கியா, உடனே கிளம்பனும் இல்லைனா நான் இங்க இருக்க மாட்டேன் என கூறுகிறார்.
இந்த நிலையில் இந்த வாரம் வெளியான புரோமோவில், மறுபடியும் கோபிக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. இதனால் அவர் வீட்டை விட்டு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் ராதிகா கோபிக்கு கெடு கொடுத்து வரவில்லை என்றால் வீட்டை காலி செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதில் என்ன நடக்கும் என இனி பார்க்கலாம்.