அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக சொல்லி வெளிவந்த செய்திகள் அனைத்தும் உண்மையல்ல என்று விக்னேஷ் சிவன் பேசியிருக்கிறார். இதுகுறித்தான விரிவான செய்திகளைப் பார்ப்போம்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் படத்தில்தான் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு வருடம் காத்திருப்பிற்கு பிறகு சமீபத்தில்தான் இவர்களின் கல்யாண ஆவனப்படம் வெளியிடப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் எங்குப் பார்த்தாலும் இவர்களின் பேச்சுதான்.
ஏனெனில், நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் அந்த ஆவணப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆகையால் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் நயன்தாரா மீது குற்றம் சாட்டியதோடு 10 கோடி கேட்டிருந்தார். இதற்கு நயன்தாரா பதிலடி கொடுக்க, பெரிய பஞ்சாயத்தே வெடித்தது.
இதைத்தொடர்ந்து நயன்தாரா மீது தனுஷ் வழக்குப் போட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் இருவர் குறித்தும் வதந்திகள் வந்துக்கொண்டே தான் இருந்தன. எப்போதும் சமூக வலைதளங்களில் இவர்கள் குறித்தான செய்திகள், மீம்ஸ், ட்ரோல்ஸ் போன்றவை இருக்கத்தான் செய்கின்றன.
இந்தநிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் புதுச்சேரி சென்றிருந்தார். அங்கு அவர் புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை அப்போது உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகில்ஸ்’ ஹோட்டலை விலை கேட்டதாகவும் அதற்கு, அது அரசு சொத்து அதை எல்லாம் விற்க முடியாது என்று அமைச்சர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக விமர்சித்தார்கள்.
இதுகுறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியிருந்தார். அதாவது திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், அயல்நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளைப் போல புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக நடத்துவதற்கு அனுமதி கேட்டு தான் வந்திருந்தார்.” என்றார்.
இந்தநிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்று போட்டிருக்கிறார். அரசு சொத்தை நான் வாங்க முயன்றதாக சமூக வலைதள பக்கங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதுச்சேரி ஏர்போர்ட்டை பார்வையிட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.” என்று பதிவிட்டிருந்தார்.