
பிக்பாஸில் இன்றைய டாஸ்க்கின் போது ராணவுக்கு அடிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார். தற்போது பலர் விஜய் சேதுபதியின் கருத்துக்களை ஆதரித்தாலும், அவர் முகத்தில் அடித்தபடி பேசுகிறார் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
இதுவரை இல்லாததாக 8வது சீசனில் ஆண் பெண் என இரு வீடாக பிரிக்கப்பட்டது. கடந்த சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என பிரிக்கப்பட்டது வரவேற்கபட்டது. தொடர்ந்து இந்த சீசனிலும் வரவேற்கப்பட்ட நிலையில் அனைவரும் சேஃப் கேம் ஆடுவதாக கருத்து பரவி வந்தது. இந்த நிலையில் கோடுகள் அழிக்கப்பட்டு ஒரே வீடாக ஆன நிலையில், அனைவரும் தனித்தனியாக தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வார மேனேஜர் Vs தொழிலாளர்கள் டாஸ்க்கில் பல பிரச்சனைகள், மோதல் ஏற்பட்ட நிலையில் கடைசியில் சத்யாவும், தர்ஷிகாவும் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இதனால் இனி தர்ஷிகா விஷால் காதலை பார்க்க தேவையில்லை என ரசிகர்கள் உற்சாகமும் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் கேப்டன்சி போட்டிக்கு முத்து, ஜாக்குலின், விஷால் போட்டியிட ராணவின் கேம் சேஞ்சால் விஷால் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இன்று செங்கல் அடுக்கும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியான புரோமோவில் பவித்ரா தனது டாஸ்க்கில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அதை தடுப்பதற்காக வந்த ராணவை ஜெஃப்ரி கீழே தள்ளி விடுகிறார். இதில் நிலை தடுமாறி விழுந்த ராணவ் அடிப்பட்டு கதறி கொண்டிருக்கிறார், ஆனால் மனிதாபிமானமே இல்லாமல் மற்றவர்கள் அவர் நடிக்கிறார் என சொல்லி கடந்து செல்கின்றனர். ஆனால் அருணும், விஷாலும் ஓடி சென்று ராணவை காப்பாற்றி அனுப்பி வைக்கின்றனர். சிறுது நேரத்தில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் பிக்பாஸ் கூறுகிறார்.
அதற்கு சவுந்தர்யா அவன் எப்போது நடிக்கிறானே தெரியமாட்டுது என கூறுகிறார். இதனால் ரசிகர்கள் பதற்றம் அடைய, ஜெஃப்ரியை திட்டி வருகின்றனர். ஜெஃப்ரி டால் டாஸ்க்கிலும் இது போன்று தான் செய்தார். இதே விஷயம் ராணவ் செய்திருந்தால் என்னவெல்லாம் சொல்லியிருப்பார்கள் மற்ற போட்டியாளர்கள் என குமுறி வருகின்றனர். மேலும் ஓடி வந்து காப்பாற்றிய அருணையும், விஷாலையும் பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் ராணவுக்கு என்னாச்சு என கேட்டு வருகிறார்கள். இனி விளையாட மாட்டாரா என்ற கேள்வியும் ஓடி வருகிறது. ஆனால் ராணவ் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிடுவார் என சொல்லப்படுகிறது. இதற்கு கண்டிப்பாக விஜய்சேதுபதி மற்றவர்களை சரமாரியாக கேள்வி கேட்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.