ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படத்தில் சூரி நடித்ததாக அவரே கூறியிருக்கிறார். இதுகுறித்து கே.எஸ்.ரவிகுமாருக்கே தெரியாததால், இதை கேட்டு ஷாக் ஆகியிருக்கிறார்.
நடிகர் சூரி ஒரு கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வந்து, தனது திறமை மூலம் அனைவருக்கும் பிடித்தமான காமெடியனாக மாறினார். சாதாரணமாக ஒரு காமெடியன், ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாறுவது மிகவும் கடினம். அது கடினம் என்று தெரிந்தும் , அந்தப் பாதையில் பயணித்த சந்தானம் கூட இன்னும் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கவில்லை.
ஆனால், சூரி ஹீரோவாக நடித்த முதல் படமே செம்ம ஹிட்டானது. ஆம்! வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படம், அவரின் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. காமெடியன் ஹீரோவாக முடியாது என்ற விஷயத்தை சுக்கு நூறாக உடைத்தவர் சூரி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கருடன் படமும் அவருக்குத் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வைத்தது. அதேபோல் கொட்டுக்காளி சர்வதேச அளவில் ஹிட் அடித்தது.
வசூல் ரீதியாக ஹிட்டாகவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பலரின் நல்ல கருத்துக்களைப் பெற்றது. விடுதலை படத்தைவிடவும் இதில் சூரியின் நடிப்பு அசுரத்தனமாக இருந்தது என்று ரசிகர்கள் கூறினர். இனி கதாநாயகனாகவே நடிக்கவும் சூரி முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.
அந்தவகையில் அவர் காமெடியனாக நடிப்பதற்கு முன்னர் சில படங்களில் மிகவும் சின்ன சின்ன ரோல்களில் எல்லாம் நடித்தாராம். மேலும் செட்டில் சின்ன சின்ன வேலைகளையும் செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தில் நடிகர்களுக்கு fan போடும் வேலையை சூரி செய்து இருக்கிறாராம். தற்போது பேட்டி ஒன்றில் அவர் இதை கூறி இருக்கிறார்.
அஜித்தின் வில்லன் படத்தின் செட்டிலும் சூரி பணியாற்றினாராம். அந்த தகவலை கேட்டு கே.எஸ்.ரவிகுமாரே ஆச்சர்யம் அடைந்து இருக்கிறாராம்.
நடிகர்களுக்கு ஃபேன் போட்டு வேலை செய்த சூரி, தற்போது பெரிய ஹீரோவாக வலம் வருவதே மிகப்பெரிய வெற்றிதான். இன்று கூட பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் பூஜை க்ளிக்ஸ் வெளியாகின. இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.