சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தி போட்டியில் கலந்துக்கொண்டிருக்கிறார்.
நேற்றைய எபிசோடில் ஆனந்தி சிங்கப்பெண்ணாக களம் இறங்கியிருக்கிறாள். அதாவது மகேஷ் அறிவித்த 7 லட்சம் பரிசுத் தொகையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று போராடுகிறார். அந்த ஏழு லட்சம் இருந்தால்தான் தனது அக்காவின் கல்யாணத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று நினைக்கிறார்.
ஆனால் ஆனந்தியின் வெற்றியை தடுக்க மித்ராவும் கருணாகரனும் முழு மூச்சில் இறங்கியிருக்கிறார்கள். இதன் முதல்படியாக ஆனந்தி வழுக்கி விழும்படி சோப்பு நுரையை கீழே ஊற்றிவிடுகின்றனர். ஆனந்தியும் வழுக்கி விழுகிறாள். ஆனால், அவள் எப்படியோ ஆபிஸுக்கு வந்துவிடுகிறாள். அத்துடன் போட்டியில் வெற்றிபெற்றே தீருவேன் என்று சவால் விட்டிருக்கிறாள்.
ஆனால், நேற்று முழுவதும் ஆனந்தியால் முன்னேறவே முடியவில்லை. முதலிடத்தில் உஷா மற்றும் இரண்டாம் இடத்தில் ஜெயந்தி தான் மூன்று ரவுண்டுகளாக இருந்து வந்தார்கள். ஆனந்திக்கு கை கால் வலியோடு காய்ச்சலும் வந்துவிடுகிறது. இதைப் பார்த்து ஆனந்தி மற்றும் கருணாகரன் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி போட்டியிலிருந்து விலகியது போல் காட்டப்பட்டு இருக்கிறது. அன்பு ஆனந்தியை கேன்டீனுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி ஊட்டி விடுகிறான்.
மேலும் மகேஷிடம் ஆனந்தியின் அக்கா திருமணத்தைப் பற்றி அன்பு தெரிவித்து இருப்பது போல் காட்டப்படுகிறது.
போன முறை 10 லட்சம் கொடுத்ததற்கே ஆனந்தி அதை அழகன்தான் கொடுத்தான் என்று நம்பிவிட்டாள். இந்த முறையாவது அப்படி நடக்கக் கூடாது என மகேஷ் அன்பு விடம் கேட்டுக்கொள்கிறான். ஆனந்தி அக்காவின் திருமணத்திற்கும் மகேஷ் தான் காசு கொடுக்கப் போகிறான் என்பது தெரிந்து விட்டது.
அன்புதான் ஆனந்தியின் காதலன். ஆனால், அவனால் உதவமுடியாமல் இருப்பது பெரும் சங்கடமாக இருக்கிறது. இந்த போட்டியில் ஆனந்தி வெற்றிபெற்று பணத்தை வெல்வாலா? அல்லது மகேஷ் உதவி செய்வானா? போன்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிங்கப்பெண்ணே தொடர் நகர்கிறது.