
பிக்பாஸ் 8வது சீசனில் புது அட்வாண்டேஜாக உள்ளே வந்த போட்டியாளர் ரவீந்தர் தவறு செய்து மீண்டும் வெளியேறியுள்ளார்.
இதுவரை எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக இந்த சீசனில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார்.
விறுவிறுப்பாக அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போட்டியில் தற்போது 8 பேர் மீதம் இருக்கின்றனர். டிக்கெட் டு பினாலேவை தட்டி சென்ற ராயன் நேரடியாக பைனல்ஸுக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து கடந்த வார இறுதியில் ராணவும், மஞ்சரியும் எலிமினேட் செய்யப்பட்டு விட்டனர். பலரும் ராணவின் எலிமினேஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான புரோமோ ஒன்றில் பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். இதனை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள் ராணவ் மீண்டும் வரவேண்டும் என கூறி வருகின்றனர்.
அதாவது தற்போது உள்ள 8 பேரில் ரயன் நேரடியாக பைனலுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள 7 பேரில் 2 பேருக்கு பதிலாக வைல்டு கார்டு என்ட்ரியாக இருவர் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றைய எபிசோட்டில், ரவீந்தர், அர்ணவ், தர்ஷா, சுனிதா, வர்ஷினி, ரியா, சாச்சனா, சிவக்குமார் ஆகிய 8 பேரும் உள்ளே வந்தனர். அதோடு ஏற்கனவே இருந்த போட்டியாளர்களின் ஆட்டத்தை கதிகலங்க செய்தனர். மேலும் வெளியே நடக்கும் விஷயத்தை உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இரவில் இதோடு போதும், இனி வெளியுலக வாழ்க்கை பற்றி உள்ளே பேசக்கூடாது என்றும், மீறினால் வெளியேற்றப்படுவீர்கள் எனவும் பிக்பாஸ் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் இன்று இந்த ரூல்ஸை மீறி ரவீந்தர் வோட்டிங் குறித்து பேசிவிட்டார், இதனால் கடுப்பான பிக்பாஸ் ரவீந்தரை வெளியேற்றுகிறார். நல்ல போட்டியாளர் என மக்கள் மத்தியில் பெயர் பெற்ற ரவீந்தர் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அப்படி கிடைத்த 2வது வாய்ப்பையும் ரவீந்தர் தவறாக பயன்படுத்தி வெளியே சென்றுவிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. அதில் ரவீந்தர் கண் கலங்கிய படி வெளியேறுகிறார்.