
பிக்பாஸ் சீசன் 8-ல் Ticket to finale டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய நாளில் அதன் வின்னர் அறிவிக்கப்படுகிறார்.
உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார்.
விறுவிறுப்பாக அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போட்டியில் தற்போது 10 பேர் மீதம் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் டிக்கெட் டு ஃபினாலேவை பெற்று நேரடியாக ஃபைனல்ஸுக்கு செல்வார்கள். தற்போது நடந்து வரும் இந்த டாஸ்கில் மொத்தம் 10 போட்டிகள் நடத்தபப்ட்டது. பலரும் ரயன் தான் வெற்றி பெறுவார் என சொல்லி வந்தார்கள். ஆனால் பிக்பாஸ் நேற்று "சனிக்கிழமை தான் தெரியவரும், அதுவும் ஒரு ட்விஸ்ட்" என கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது ரயன் தான் டிக்கெட் டு பினாலே என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வார இறுதியில் மஞ்சரி எலிமினேட் செய்யப்படுவதாகவும், மற்றொரு நபராக ராணவ் எலிமினேட் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. கடந்த ப்ரீஸ் டாஸ்க்கில் ரயன் தான் வெற்றி பெற வேண்டும் என அவரது அக்கா கூறி சென்ற நிலையில், மாஸாக விளையாடி ரயன் இதில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை 8 சீசனில் யாரும் செய்யாத ஒன்றான தலைமுடியை பச்சை கலரில் கலர் செய்து தியாகம் செய்துள்ளார்.
இவரின் இந்த விடாமுயற்சிக்கு ஏற்ப டிக்கெட் டு ஃபினாலே கிடைத்துள்ளது. இதன் மூலம் இவர் நேரடியாக பைனல்ஸுக்கு தயாராகியுள்ளார். பைனல்ஸில் இருக்கும் 5 பேரில் இவரும் ஒருவர் என்பது நிரூபணமாகிவிட்டது. மற்ற 4 பேர் முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அருண், விஷால், பவித்ரா, சவுந்தர்யா ஆகியோரில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஓட்டிங் அடிப்படையில் இது யார் என்பதை பார்க்கலாம். இதனிடையே அடுத்த வார இடையில் ஒரு மிட் எவிக்ஷனும், பெட்டியும் வைக்கப்படும். பெட்டியை ஒருவர் எடுத்து செல்லும் நிலையில், மீதம் 6 பேர் இருப்பார்கள். இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த வார டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் பலரும் தீயாய் விளையாடிய நிலையில், இன்று விஜய்சேதுபதி போட்டியாளர்களை வைத்து என்ன செய்கிறார் என பார்க்கலாம்.