ரிஸ்க் எடுத்து வெளியேறிய ஜாக்குலின்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Jacquline
Jacquline
Published on

பிக்பாஸ் 8வது சீசனில் ரிஸ்க் எடுத்து வாய்ப்பை தவறவிட்டு ஜாக்குலின் தற்போது வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார்.

விறுவிறுப்பாக அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போட்டியில் தற்போது டாப் 6 போட்டியாளராக முத்து, ரயன், விஷால், பவித்ரா, சவுந்தர்யா, ஜாக்குலின் ஆகியோர் இருக்கிறார்கள். கடந்த வார இறுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபக் மற்றும் அருண் வெளியேறினார்கள். இதையடுத்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே சென்று ஆட்டத்தையே மாற்றினார்கள். கடைசி வாரமான இந்த வாரத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பழைய சீசன்களில் பணப்பெட்டி வைக்கப்படும், அதை ஒரு நபர் எடுத்து வெளியேறுவார். ஆனால் இந்த சீசனில் உங்களுக்கான பெட்டியை எடுத்துவிட்டு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்குள் வந்துவிட்டால், அந்த பணம் உங்கள் வசம். அப்படி இல்லையென்றால் பணமும் இல்லை, போட்டியிலும் இடமில்லை என அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பெரிய ஹிட் படங்களைத் தெரிந்தே தவறவிட்டேன்: பிரபல நடிகர் உருக்கம்!
Jacquline

முதலில் முத்து 50ஆயிரம் எடுத்து பணத்தை தன்வசப்படுத்தி கொண்டார். இந்த பணம் வெற்றியாளரின் 50 லட்சத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. தொடர்ந்து ரயனும், பவித்ராவும் தலா 2 லட்சத்தை வென்றனர். இதையடுத்து விஷால், சவுந்தர்யா, ஜாக்குலின் முயற்சித்தனர். இதில் விஷால் பெட்டியுடனும், சவுந்த்ரயா நேரமின்மையால் பெட்டியை எடுக்காமலும் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் ஜாக்குலின், குறிப்பிட்ட நேரத்திற்குள் வராததால் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
'சிந்துபாத்தே முடிந்தாலும் இவர்கள் முடிக்க மாட்டார்கள் போலும்'... சின்னத்திரை சோகம்!
Jacquline

தொடர்ந்து 15 வாரங்களும் நாமினேட் செய்யப்பட்டு ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு வரலாற்று சாதனை படத்தை ஜாக்குலின் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டாப் 2 என்று கணிக்கப்பட்ட ஜாக்குலின், தீபக் ஆகியோர் வெளியேறிவிட்டதால் ஆட்டமே மாறியுள்ளது. இதனால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொண்டாட்ட வாரமான இந்த வாரத்தில் பல ட்விஸ்ட்கள் வந்துகொண்டே இருக்கிறது. இன்னும் இந்த போட்டி முடிவடையாததால், மேலும் பல சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜாக்குலின் வெளியேற்றத்தால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com