பிக் பாஸ் 10 வீட்டில் 10 ஜன்னல்கள் ஏன்? விஜய் சேதுபதி காட்டும் புது சர்ப்ரைஸ்!

EVP வளாகத்தில் அமைந்துள்ள பிரமாண்ட பிக் பாஸ் வீட்டின் சுவாரசியமான அமைப்புகள் மற்றும் புதிய பஸ் சர்ப்ரைஸ் பார்வை.
பிக் பாஸ்
பிக் பாஸ்
Updated on

தமிழ்நாடு மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6 முதல் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை வழங்குகிறார் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்ற ஆர்வம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இதை புரிந்து கொண்ட விஜய் டிவி நிறுவனத்தினர் ஊடகங்கள் சிலவற்றை அழைத்து பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற தயாராக உள்ள வீட்டை சுற்றி பார்க்க அழைத்து சென்றனர். பூந்தமல்லி தாண்டி பெங்களூர் செல்லும் சாலையில் EVP என்ற மிகப்பெரிய வளாகத்தின் ஓரிடத்தில் இந்த பிக் பாஸ் வீடு உள்ளது. இந்த இல்லம் எப்படி இருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.

நுழைந்த உடன் ஒரு பசுமை நிறைந்த வெளிப்புறம் அங்கே நான்கு இடங்களில் குஷன் இருக்கைகள் இருக்கிறது. அங்கே 10 ஜன்னல்கள் உள்ளன. இது எதற்கு இந்த 10 ஜன்னல்கள் என்ற சந்தேகம் நமக்கு வந்த போது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மனுனீ இதற்கான விளக்கத்தை தருகிறார் "பிக் பாஸ் சீசன் 10 என்பதை நினைவூட்டும் விதமாக இங்கே உள்ள சில வேலைப்பாடுகளில் 10 என்ற எண்ணிக்கை வருமாறு நாங்கள் அமைத்திருக்கிறோம். அதற்கான ஒரு முயற்சி தான் இந்த பத்து ஜன்னல்கள்" என்று பதில் தருகிறார். 

வெளியே குஷன் சேரில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வீட்டினில் உள்ள மிகப்பெரிய அறைக்குள் நுழைகிறோம். அந்த வீட்டிற்குள் நுழையும் போதே ஏதோ ஸ்டார் ஹோட்டலில் உள்ளே நுழைந்த மாதிரியான ஒரு உணர்வு ஏற்படுகிறது. வித்தியாசமான பல வேலைப்பாடுகள் சுவர்களிலும், அங்கே உள்ள பொருட்களிலும் தெரிகிறது. "இந்த சீசனில் சிறிது நாங்கள் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். அதனால் ஆங்காங்கே இயற்கையின் செடி, மரங்கள் போன்ற பெயிண்டிங்கை வரைந்திருக்கிறோம்" என்கிறார் மனுனி. அங்கே ஒரு வயதான மனிதனின் சிற்பம் ஒன்று சுவற்றில் செதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சிற்பத்தின் காரணம் என்ன இவர் யார்? என்று கேட்டோம். "இவர் காமன் மேன் என்னும் மிக சாதாரண மனிதர் இந்த கட்டிடத்தை கட்டியவர்கள் மிக சாதாரண மனிதர்கள். நம்மில் ஒருவர்கள் என்று புரிவதற்காக இந்த சிற்பத்தை இங்கே செதுக்கியிருக்கிறோம்" என்கிறார் மனுனி.

பிக் பாஸ்
பிக் பாஸ்

ஹாலில் உள்ள பல பொருட்கள் நம்மை கண்ணை கவர்கின்றன குறிப்பாக சாப்பிடுவதற்கும் பிக் பாஸில் வருபவர்கள் உட்கார்ந்து "வாயால்" சண்டை போடுவதற்கும் ஒரு மிகப்பெரிய டேபிளும் அதை சுற்றி நிறைய இருக்கைகளும் உள்ளன அந்த டேபிளில் மிகவும் கலைநயமான பீங்கான் தட்டுகள், கோப்பைகள் உள்ளன ஹாலில் இடது பக்கம் மிக நவீனமான ஒரு சமையலறை உள்ளது. 

இந்த சமையலறை பொருட்களை பல நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ளார்கள் என்பதற்கு அடையாளமாக அந் நிறுவனங்களின் பெயர்களும் சமையலறையின் பின்னே உள்ளது. சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வந்து விட்டன. இனி சமைக்க வேண்டியது தான் பாக்கி என்று எண்ணத் தோன்றுகிறது. மிகப்பெரிய அறை நடுவில் மேலே மிகப்பெரிய ஒரு ஒளி விளக்கு வேலைப்பாடுடன் உள்ளது.இது மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

மூலையில் ஒரு அறை இருந்தது. அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே போக முயற்சிக்கிறோம். அப்போது ஒருங்கிணைப்பாளர் ஓடி வந்து "அதை திறக்க வேண்டாம். அது confession ரூம்" (வாக்குமூலம் தரும் அறை)அறை என்றார். நாம் அவரிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த confesson அறைக்குள் செல்ல அனுமதித்தார். உள்ளே அறையில் ஒரு மைக் உள்ளது.

வாக்கு மூலம் தர விரும்பும் பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் இந்த அறைக்குள் வந்து confesson தருகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இனி பெட்ரூமுக்குள் போகலாம். மிகப்பிரமாண்டமான பெரிய பெட்ரூம் உள்ளது. சீசன் பத்தை நினைவூட்டும் வகையில் 10 படுக்கைகள் உள்ளன. படுக்கையறையின் ஓரத்தில் இன்னொரு சிறு அறை உள்ளது அது கேப்டனின் அறையாகும். ஹாலின் ஒரு மூலையில் ஒரு ஸ்டோர் ரூம் உள்ளது. இதை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை இதை பார்த்துவிட்டு வெளியே செல்ல மனம் இல்லாமல் நாங்கள் கிளம்பினோம்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

"இன்னொரு சர்ப்ரைஸ் ஒன்று வெளியில் இருக்கிறது "என்றார் மனுனீ. அது என்ன சர்ப்ரைஸ்? என்று ஆர்வத்துடன் வெளியே சென்றோம். அங்கே மிகப் பெரிய பிக்பாஸ் பஸ் ஒன்று இருக்கிறது இப்போது இந்த பஸ் இங்கே உள்ளது இன்னும் வரும் நாட்களில் இந்த பஸ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் செல்ல உள்ளது.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸ் தமிழ் 10: காமன் மேன்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்பு!
பிக் பாஸ்

ஸ்டார் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சியை காண்பவர்கள் அந்த பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்க மக்கள் விரும்புவார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அனைவருமே பிக் பாஸ் வீட்டில் இருப்பது போல் உணர வேண்டும் என்பதற்காக அந்த ஊருக்கே அதைப் போன்ற ஒரு மாடல் உருவாக்கி அதை பஸ்ஸில் வைத்து ஒவ்வொரு ஊருக்காக கொண்டு செல்ல இருக்கிறது ஸ்டார் விஜய் நிறுவனம். இந்த பஸ் உள்ளேயும்  நாம் சென்றோம்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

அந்த பஸ்ஸில் உள்ளே இதற்கு முன் முந்தைய சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள், அவர்கள் செய்த விஷயங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் புகைப்படங்களாக இருக்கின்றன. இதற்கு முன்பு கலந்து கொண்ட ஓவியா, தர்ஷன் உட்பட பல பிரபலமானவர்களின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்கள் இங்கே உள்ளன.

இதையும் படியுங்கள்:
விலங்குகளைப் போல் நடத்துவதா? பிக் பாஸ் காமன்மேன் முதல் எபிசோடிலேயே வெடித்த சர்ச்சை!
பிக் பாஸ்

இங்கேயும் ஒரு confesson அறை உள்ளது. இந்த பஸ் ஊர்களுக்கு செல்லும்போது அங்கே உள்ள மக்கள் தங்கள் கருத்துக்களை இந்த confession அறையில் சென்று தெரிவிக்கலாம். இதற்கான பதிலை லைவாக பிக் பாஸ் குரலிலேயே அவர்களுக்கு கிடைக்கும் வசதியை ஸ்டார் விஜய் நிறுவனம் மற்றும் இந்நிகழ்ச்சியின் வடிவமைப்பாளர்கள் உருவாக்கியுள்ளார்கள் இது நிச்சயமாக ஒரு கிரியேட்டிவ் சிந்தனை தான்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

பிக் பாஸ் இல்லம் உள்ளே உள்ள பொருட்கள் போன்றவைகளில் இதற்கு முந்திய சீசன்களில் சாயல் சிறிது தெரிந்தாலும் பிக் பாஸ் பஸ் என்பது மிகவும் புதிய சிந்தனையாகும். இந்த பிக் பாஸ் சீசன் பத்தின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று இன்னும் வரும் நாட்களில் தெரிந்துவிடும். நாமும் ஆர்வத்துடன் காத்திருப்போம்.

logo
Kalki Online
kalkionline.com