

Bigg Boss என்றாலே பிரபலங்கள், பரபரப்பு, போட்டி, சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், இந்த முறை Bigg Boss தமிழ் சீசன் 10-ல் ஒரு வித்தியாசமான முயற்சி அறிமுகமாகிறது. இதுவரை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த சாதாரண மனிதர்களில் ஒருவருக்கே, Bigg Boss வீட்டுக்குள் சென்று போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இதற்கான புதிய நிகழ்ச்சிதான் ‘Bigg Boss – The Common Man’.
Bigg Boss தமிழ் சீசன் 10-க்கு முன்னோட்டமாக உருவாக்கப்பட்டுள்ள ‘The Common Man’ நிகழ்ச்சி இன்று, ஆகஸ்ட் 16 முதல் தொடங்குகிறது. வழக்கமான பிரபலங்கள் மட்டுமே போட்டியிடும் நிகழ்ச்சியாக இல்லாமல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது திறமையையும் தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்த விரும்பும் சாதாரண மக்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தேர்வாகும் போட்டியாளர்கள் பல்வேறு சவால்கள் மற்றும் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் திறமை, தன்னம்பிக்கை, மனநிலை, குழுவாக செயல்படும் திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் சோதிக்கப்பட உள்ளன. இறுதியில் தேர்வு செய்யப்படும் பொதுமக்களில் ஒருவருக்கு Bigg Boss தமிழ் சீசன் 10 வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த புதிய நிகழ்ச்சியை நடிகையும் Bigg Boss முன்னாள் போட்டியாளருமான மாயா எஸ். கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். Bigg Boss நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களான ஓவியா, ஆரி அர்ஜூனன் மற்றும் ராஜு ஜெயமோகன் நடுவர்களாக இடம்பெறுகின்றனர். இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மொத்தம் 21 எபிசோடுகளாக உருவாகும் ‘The Common Man’ நிகழ்ச்சி Vijay TV மற்றும் JioHotstar-ல் ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் இரவு 10 மணிக்கும், வார இறுதி நாட்களில் மாலை 5.30 மணிக்கும் நிகழ்ச்சியை பார்க்கலாம். JioHotstar-ல் புதிய எபிசோடுகளும் வெளியாகின்றன.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சாதாரண மக்களுக்குள் இருக்கும் மறைந்த திறமைகளை வெளிக் கொணர்வதாகும்..சமூக வலைத்தளங்களில் பிரபலமில்லாதவர்களாக இருந்தாலும், தன்னம்பிக்கை, பேச்சுத் திறன், தலைமைத் திறன் போன்றவற்றைக் கொண்டு ஒருவர் பெரிய மேடையை அடைய முடியும் என்பதை இது நிரூபிக்கிறது... மேலும் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து , பல்வேறு மன அழுத்த சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டி இருப்பதால் அவர்களின் உண்மையான குணநலன்கள் வெளிப்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது..
பார்வையாளர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. ரசிகர்கள் தங்கள் வாக்குகளின் மூலம் இறுதி தேர்வில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் இந்த நிகழ்ச்சிக்கான தேர்வு செயல்முறை முழுவதும் ஆன்லைன் மற்றும் நேரடி ஆடிஷன் முறையில் நடைபெறுகிறது..18: வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.. போட்டியாளர்கள் தங்களது திறமையை காட்டும் வீடியோக்களை சமர்ப்பிக்க வேண்டும்..தேர்வானவர்கள் சென்னையில் நடைபெறும் இறுதி சுற்றில் பங்கேற்பார்கள்..
நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலத்திற்காக தனி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் பார்வையாளர்கள் jio hotstar செயலியில் நேரடி வாக்குப்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது..
இதன் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளரை நேரடியாக ஆதரிக்க முடியும். சமூக ஊடகங்களில் நிகழ்ச்சிக்கான ஹாஷ்டேக் பிரச்சாரங்களும் தொடங்கப்பட்டு உள்ளன..இது நிகழ்ச்சியின் பரவலான ஈடுபாட்டை அதிகரிக்கும் என தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்..
இதனால் பார்வையாளர்கள் அனுபவம் மேலும் சுவாரஸ்யமாக மாறும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இந்த முயற்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்..
இந்த முயற்சியின் சிறப்பு big boss நிகழ்ச்சியை இதுவரை வெளியில் இருந்து பார்த்து ரசித்தவர்களுக்கே அதில் ஒரு பகுதியாக மாறும் வாய்ப்பு கிடைப்பது தான்.. பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் போட்டியாளர்கள் தங்களது தனித் திறமை,, பேச்சுத் திறன், தனித்துவமான ஆளுமை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறனை வெளிப்படுத்த வேண்டி இருக்கும்..
.
பல கட்டங்களாக நடைபெறும் தேர்வு முறையில் வெற்றி பெறுபவர்களுக்கே அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.. இதனால் பிரபலமானவர்கள் மட்டுமே தொலைக்காட்சியில் தோன்ற முடியும் என்ற எண்ணத்திற்கு இந்த நிகழ்ச்சி ஒரு புதிய பார்வையைத் தருகிறது.
ஏற்கனவே வெளியான promoக்களில் போட்டியாளர்களின் உற்சாகமான செயல்பாடுகளும் கவனம் பெற்றுள்ளன.. குறிப்பாக முனியம்மாவின் கலகலப்பான பங்கேற்பு பார்வையாளர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருப்பவர்களும் Big Boss அனுபவம் கொண்டவர்கள் என்பதால் போட்டியாளர்களின் திறமையை மதிப்பிடுவதில் அவர்களின் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கலாம்.
ஓவியா முதல் சீசனில் பங்கேற்றவர்...ஆரிஅர்ஜுனன் நான்காவது சீசனின் வெற்றியாளர்..ராஜு ஜெயமோகன் ஐந்தாவது சீசனின் வெற்றியாளர்.. இவர்கள் மூவரும் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் புதிய போட்டியாளர்களை மதிப்பிடுவது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்..
இதுவரை Bigg Boss வீட்டை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தவர்கள், இனி தங்களைப் போன்ற ஒருவரை அந்த வீட்டுக்குள் பார்க்கும் வாய்ப்பைப் பெற உள்ளனர். பிரபலமாக இருப்பது மட்டுமல்லாமல், திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் என்ற புதிய நம்பிக்கையை இந்த முயற்சி ஏற்படுத்துமா? அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை நாளைய Bigg Boss நட்சத்திரம், இன்று நம்முடன் வாழும் ஒரு சாதாரண மனிதராகக்கூட இருக்கலாம்!