​சீட் எட்ஜ் பேமிலி டிராமா! விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

80-களின் கதைக்களமும் நவீன குடும்ப உணர்வுகளும்: தியேட்டரில் பார்க்கத் தகுதியானதா?
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்
Updated on
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் (2.5 / 5)

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி Tholi Prema(2018),Mr Majnu(2019), Rang De(2021), வாத்தி(2023), லக்கி பாஸ்கர்(2024) ஆகிய ஐந்து படங்கள் இயக்கியவர். அதில் மிஸ்டர் மஜ்னு மட்டும் பிளாப் படம். மற்றவை அனைத்தும் வெற்றிப்படங்கள் தான். தனுஷ் நடித்த வாத்தி தமிழில் சுமாராகப்போனாலும் தெலுங்கில் ஹிட். இவர் இயக்கிய 5 படங்களில் லக்கி பாஸ்கர் தான் பிளாக் பஸ்டர் ஹிட். கறுப்பு என்ற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சூர்யாவுடன் இவர் இணைந்திருக்கும் இந்தப்படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு பெரிய தொழில் அதிபர் + பிஸ்னெஸ் மேன், கோடீஸ்வரன். இவர் தம் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். நாயகன் சிறுவனாக இருக்கும்போதே அவனது அப்பா வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால்  நாயகனுக்கு இந்த உறவு முறையில் வெறுப்பு. திருமணம் செய்யாமலேயே வாழலாம் என நினைக்கிறான். இப்போது நாயகனுக்கு 40+ வயது.

நாயகனின் அம்மாவுக்குப்பேரன் பேத்தி பார்க்க வேண்டும், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை. தொடர்ந்து மகனை வற்புறுத்திக் கொண்டே இருக்க நாயகன் அதைத் தட்டிக்கழித்துக்கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில்.  சான்பிரான்சஸ்கோ போய் வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொள்கிறான்.

அதாவது நாயகனின் உயிர் அணுவை ஹாஸ்பிடலில் ஒப்படைத்தால் அவர்கள் வாசகைத்தாய் மூலம் கர்ப்பம் தரிக்க வைத்துக் குழந்தையைத் தருவார்கள். அந்தக் குழந்தையுடன் 10 மாதம் கழித்து இந்தியா வந்து அம்மாவிடம் குழந்தையைத் தருகிறான்.

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்

இப்போது அந்தக் குழந்தைக்கு மெடிக்கல் ரீதியாக ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனை சரியாக குழந்தையின் அம்மாவின் உதவி வேண்டும். அவரது திசுக்கள், செல்கள் மூலம் ஆபரேசன் செய்து குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்.

நாயகன் மீண்டும். அமெரிக்கா போய் வாடகைத்தாயைக்கண்டு பிடித்து அவளை இந்தியா அழைத்து வருகிறான். அந்த வாடகைத்தாய் தான் நாயகி.

நாயகி குழந்தையைக் காப்பாற்றுகிறாள். நாயகி நாயகனை விரும்புகிறாள். நாயகனுடன் அவள் இணைந்தாளா? இல்லையா?என்பது தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக த ஒன் சூர்யா. கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கேரக்டரை மனதில் வைத்து சஞ்சய் விஸ்வநாத் என்ற கேரக்டர் டிசைன் உருவாக்கப் பட்டிருக்கிறது. வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்த இளமை சூர்யாவை இதில் பார்க்க முடிகிறது. அவரது ஆடை வடிவமைப்பு, நடிப்பு இரண்டும்  பிரமாதம்.

நாயகியாக மமிதா பைஜூ.  அரங்கேற்ற வேளை பட ரேவதி, சந்தோஷ் சுப்ரமணியம் பட ஜெனிலியா, முந்தானை முடிச்சு பட ஊர்வசி மூவரும் கலந்த கலவைதான் இவர் கேரக்டர் டிசைன். கலக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாதி முழுக்க இவர் ஆகிக்கம் தான். குறும்பான பார்வை, முக பாவனைகள். க்யூட் மொமெண்ட்ஸ் என ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிப்பு.

நாயகனின் அம்மாவாக ராதிகா செம நடிப்பு. குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் கலக்கி விட்டார். அப்பாவாக ராஜீவ் மேனன், சித்தியாக ரவீனா டாண்டான் கச்சிதமான நடிப்பு. இவர்கள் போக நாசர், காளி வெங்கட், மைம் கோபி என அனைவர் நடிப்பும் ஓக்கே ரகம்.

ஜி வி பிரகாஷ் இசை சுமார் ரகம் தான். பாடல்களும் பெரிய ஹிட் இல்லை. பின்னணி இசையும் பிரமாதம் லெவலில் இல்லை.

எடிட்டிங்க் பக்கா. ரன்னிங்க் டைம் 161 நிமிடங்கள். இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைனிங்க் ஓக்கே ரகம்.

சபாஷ் டைரக்டர்

1. நாயகன் கார் டிரைவருடன் செய்யும் கான்வர்சேஷன் அருமை.

2. நாயகி, நாயகனின் அம்மா இருவருக்குமான ஹாஸ்லிடல் சீக்வன்ஸ் அருமை.

3. முதல் பாதியை கலகலப்பாகக்கொண்டு போன விதம் அருமை.

4. சுனிலின் காமெடி டிராக் கச்சிதம்.

5. நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி, மாமியார், மருமகள் பாண்டிங் இரண்டும் அருமை.

6. நாயகனின் அம்மா இறந்த பின்  காட்டும் உணர்ச்சிப்பூர்வமான நாயகனின் நடிப்பு அமர்க்களம்.

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. படத்தின் முக்கியக்கரு வாடகைத்தாய் மேட்டர். அது  எழுத்தாளர் சிவசஙகரி எழுதிய  ஒரு சிங்கம் முயலாகிறது என்ற நாவலைத்தழுவி முக்தா சீனிவாசன் எடுத்த அவன் அவள் அது (1980) படத்தில் வந்ததுதான். சிவக்குமார், லட்சுமி தம்பதியாக நடிக்க வாடகைத்தாயாக ஸ்ரீப்ரியா நடித்திருப்பார்.

2. சூர்யா ரசிகர்களைத் திருப்திப்படுத்த வலியத்திணிக்கப்பட்ட இரண்டு சண்டைக்காட்சிகள் படத்துடன் ஒட்டவில்லை.

3. முதல் பாதி திரைக்கதை அளவு பின் பாதி திரைக்கதை இல்லை. எங்கெங்கோ பயணிக்கிறது. படத்தின் நீளமும் அதிகம். போர் அடிக்கிறது.

4. கதைப்படி நாயகன் துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் சாம்பியன். மீடியாவில் புகழ் பெற்றவர். அப்படிப்பட்ட வி ஐ பி யை ஒரு பெரிய ஹோட்டல் ஓனருக்கு அவரை யார் என்றே தெரியாமல் இருப்பது எப்படி?

5. நாற்பது + வயது நாயகன், 20+ வயது நாயகி வயது வித்தியாசக்காதல் கதை அகத்தியன் இயக்கிய விடுகதை படத்தில் வந்ததுதான்.

6. கைக்குழந்தையுடன் இருக்கும் நாயகனை நாயகி சம்மதிக்க வைப்பதும் கே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் பார்த்ததுதான்.

7. பின் பாதிக்கதையில் அப்பா செண்டிமெண்ட், சித்தி மீது பாசம், சித்தி மகளின் திருமணம் என கதை எங்கெங்கோ போகிறது.

8. முதல் பாதிக்கதைக்கும், பின் பாதிக்கதைக்கும் சம்பந்தமே இல்லை.

9. ஊட்டியில் நடக்கும் சித்தி மகளின் மேரேஜ் பங்க்‌ஷன் போர்சன் 26 நிமிடங்கள் வருகிறது. மெயின் கதைக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை. நமக்கு ஒரு எமோஷனல் கனெக்ட்டும் இல்லை.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்

ரசித்த வசனங்கள்

1. நம்ம லட்சியத்துக்காகவும், கனவுக்காகவும் எதை வேணும்னாலும் இழக்கலாம். ஆனா எதற்காகவும் இலட்சியத்தையும், கனவையும் விட்டுத்தரக்கூடாது.

2. நம்மைப்படிக்க வைத்து ஆளாக்கின நம் பெற்றோரை எப்பவும் நம் கூடவே வெச்சுக்கனும்.

3. ஒரு பெண் ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வது போல் ஒரு ஆணால் பார்த்துக்கொள்ள முடியாது.

4. ஒருவர் மீது நமக்கிருக்கும் காதல் குறிப்பிட்ட காலம் வரை தான். அதற்குப்பின் நம் மனம் வேறு ஒரு துணையைத் தேடிப்போகும்.

5. ஒரு விஷயம் உனக்குத் தேவைன்னா நீ தான் போய்க்கத்துக்கணும்.

6. ஒரு பொருள் ரிப்பேர் ஆகிட்டா புதுப்பொருள் வாங்கும் வரை அந்தப்பொருளை ரிப்பேர் செய்ய உனக்குத் தெரிந்திருக்கணும்.

7. படிக்க வைப்பது என்னோட கடமை.

8. விவசாய நிலங்களை எக்காரணம் கொண்டும் கை வைக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் வெர்சஸ் மகுடம்: நேரடி பாக்ஸ் ஆபிஸ் மோதல்!
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்

அடல்ட் கண்ட்டெண்ட். வார்னிங்: க்ளீன் யு. குடும்பத்துடன் பார்க்கலாம்.

கல்கி கமெண்ட்: பெண்களை மிகவும் கவரும். பேமிலி ஆடியன்சை தியேட்டருக்கு வரவைக்கும். கருப்பு மாதிரி லக்கி பாஸ்கர் மாதிரி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகாது. மீடியமாக ஓடும். ரேட்டிங்க். 2.5 /5

விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சுவராஸ்யத்தகவல்

நாயகனின் அப்பா பெயர் விஸ்வநாத். இது மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம்(1988) படத்தில் விஜயகுமார் கேரக்டர் பெயர். அவருக்கும் இரு மனைவிகள். இரு மகன்கள். அசோக் விஸ்வநாத், கவுதம் விஸ்வநாத்.

இப்படத்தின் திரைக்கதை அமைப்பு, நடிப்புத் திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிய முழுமையான மதிப்பீட்டை அறிந்துகொண்டு, உங்கள் சினிமா ரசனையை மேம்படுத்திக் கொள்ள உதவக்கூடும்.

logo
Kalki Online
kalkionline.com