
பிக்பாஸ் வீட்டில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில் வீட்டிற்குள் வந்த அருணின் தந்தை புதிய ட்விஸ்டை கூறியுள்ளார்.
உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார். தற்போது பலர் விஜய் சேதுபதியின் கருத்துக்களை ஆதரித்தாலும், அவர் முகத்தில் அடித்தபடி பேசுகிறார் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
கடந்த சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என பிரிக்கப்பட்டது வரவேற்கபட்டது. தொடர்ந்து இந்த சீசனிலும் ஆண் பெண் என இரு வீடாக பிரிக்கப்பட்டது வரவேற்கப்பட்ட நிலையில் அனைவரும் சேஃப் கேம் ஆடுவதாக கருத்து பரவி வந்தது. இந்த நிலையில் கோடுகள் அழிக்கப்பட்டு ஒரே வீடாக ஆன நிலையில், அனைவரும் தனித்தனியாக தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.
தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில், போட்டியாளர்களின் குடும்பத்தினரை பார்த்து ரசிகர்களும் உற்சாகமடைந்து வருகின்றனர். வரிசையாக ஒவ்வொரு குடும்பத்தாராக வந்து கொண்டிருக்கும் நிலையில், கடைசியாக இன்று காலை ஜெஃப்ரியின் தாயார் வந்திருந்தார். தொடர்ந்து வந்த அருணின் தந்தை முத்து நமது சொந்தக்காரர் என கூறியுள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் அருணையும், முத்துவையும் கிண்டல் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ரசிகர்களும் ஷாக் ஆகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் இருந்து சண்டையிட்டு கொள்ளும் முத்துவுக்கும் அருணுக்கும் இது பெரிய ட்விஸ்டாக அமைந்துள்ளது. இதனால் இனி இவர்களின் போட்டியில் பெரும் மாற்றம் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது அருணின் தந்தை சர்ப்ரைஸாக கன்பெக்ஷன் ரூமில் இருந்து வெளியேவந்தார். தொடர்ந்து மஞ்சரி, முத்து, தீபக்கிடம் தனது முரண்பாடை தெரிவித்தார். அப்போது முத்து உனக்கு தம்பி என கூறினார். நாங்களும் அதே ஊர் தான் நீங்கள் எங்க பங்காலி என கூறி இருவரையும் சேர்த்து வைத்தார். இதனால் இருவரும் ஒற்றுமையாகிவிட்டனர். இனி இவர்களின் ஆட்டத்தில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது. இதனை தொடர்ந்து வரும் முத்துவின் குடும்பத்தாருக்கு இது தெரியுமா என்று பொருத்திருந்து பார்க்கலாம். முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்து வரும் நிலையில், இந்த ட்விஸ்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.