
பிக்பாஸ் சீசன் வரலாற்றிலேயே முதல் முறையாக காதலர்கள் ஃப்ரீஸ் டாஸ்க்கில் உள்ளே வருகிறார்கள்.
உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார்.
தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில், போட்டியாளர்களின் குடும்பத்தினரை பார்த்து ரசிகர்களும் உற்சாகமடைந்து வருகின்றனர். 3 நாட்களும் அனைவரது குடும்பத்தினர் வந்த நிலையில் இன்று போட்டியாளர்களின் காதலர்கள், நண்பர்கள் வரிசையாக வருகின்றனர். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக இந்த சீசனில் இவ்வாறு நடந்து வருகிறது. காலையிலேயே சவுந்தர்யாவின் காதலரும், முன்னாள் போட்டியாளருமான விஷ்ணு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில் சவுந்தர்யா, அவருக்கு Will You Marry Me என காதலை புரோபோஸ் செய்தார்.
தொடர்ந்து அருணின் காதலியும் முன்னாள் போட்டியாளரும் டைட்டில் வின்னருமான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். தனது காதலியை ஹார்லி குவின் என கூறி வந்த நிலையில், ரசிகர்கள் முன்னாடி இவர் தான் எனது ஹார்லி குவின் என அர்ச்சனாவை அறிமுகம் செய்கிறார். தொடர்ந்து இருவரின் காதல் ரசத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். தொடர்ந்து இருவரும் மாறி மாறி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் வீட்டிற்குள் வந்த அருணின் குடும்பத்தார் அவரின் காதலுக்கு பச்சை கொடி காட்டியதோடு, அடுத்த 6 மாதங்களில் திருமணம் என்ற அப்டேட்டையும் கூறி சென்றுள்ளார். அருண் எடுத்த எல்லா முடிவும் சரியாக தான் இருக்கும், அதனால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷன் என கூறினார்கள்.
இந்த நிலையில் இன்று அர்ச்சனா வீட்டிற்குள் வரவே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே அர்ச்சனா கடந்த சீசனில் நல்ல பெயரை பெற்று அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னராகியுள்ளார். இந்த சீசனிலும் அவர் வீட்டிற்குள் வரவே அர்ச்சனா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். தொடர்ந்து அர்ச்சனா அருணுக்கு அட்வைஸ் செய்ய இதை வைத்து அவர் டைட்டிலை ஜெயிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அனைவரது குடும்பத்தினரும் தங்களுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி சென்ற நிலையில், போட்டியாளர்களும் பைனல்ஸுக்கு தயாராகியுள்ளனர். அதுவும் இல்லாமல் அதிக போட்டியாளர்கள் 80 நாட்களை கடந்தும் இருப்பதால், யார் டைட்டில் வின்னர் என்பதை கூட கணிக்க முடியாமல் இருக்கின்றனர். மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளதாகவும், அன்ஷிதா மற்றும் விஷால் வெளியேறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.