
பிக்பாஸ் 8வது சீசனில் இன்று நாமினேஷன் ஃப்ரீ பாஸுக்கு சண்டை போட்டுகொள்கிறார்கள்.
உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார். தற்போது பலர் விஜய் சேதுபதியின் கருத்துக்களை ஆதரித்தாலும், அவர் முகத்தில் அடித்தபடி பேசுகிறார் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
இதுவரை இல்லாததாக 8வது சீசனில் ஆண் பெண் என இரு வீடாக பிரிக்கப்பட்டது. கடந்த சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என பிரிக்கப்பட்டது வரவேற்கபட்டது. தொடர்ந்து இந்த சீசனிலும் வரவேற்கப்பட்ட நிலையில் அனைவரும் சேஃப் கேம் ஆடுவதாக கருத்து பரவி வந்தது. இந்த நிலையில் கோடுகள் அழிக்கப்பட்டு ஒரே வீடாக ஆன நிலையில், அனைவரும் தனித்தனியாக தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வார டெவில் டாஸ்கில் பலரும் ரசிகர்களின் வெறுப்பை பெற்ற நிலையில், ஆனந்தியும், சாச்சனாவும் எலிமினேட் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வார தொடக்கத்திலேயே அருணுக்கும் தீபக்கிற்கும் சண்டை முட்டியது. இந்த சண்டை வெடித்த நிலையில் தர்ஷிகா கேப்டன் ரஞ்சித்தின் ஒரு முட்டையை எடுத்துவிட்டார். தொடக்கத்திலேயே நெகட்டிவாக தொடங்கிய ரஞ்சித்திற்கு சூப்பராக ஒரு டாஸ்க் வந்தது.
இந்த வார டாஸ்க் மேனேஜர் Vs தொழிலாளர்கள். இதில் டாப் ப்ளேயர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேனேஜர்களாகவும், அதற்கு கீழே இருப்பவர்கள் தொழிலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டாஸ்க் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையிள் பிக்பாஸ் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை கொண்டு வந்தார். திடீரென ஸ்வாபிங் அறிவித்த பிக்பாஸ் நேற்று அனைத்து வேலைகளையும் தொழிலாளர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என அறிவித்தார். இதுவரை பெடலிங் செய்தால் போதும் என்றிருந்த நிலையில், பெடலிங், சமையல், டாய்லட்டிற்கு தண்ணீர் சுமப்பது என அனைத்து வேலைகளும் தொழிலாளர்கள் தலையில் விழுந்தது. இந்த ட்விஸ்டால் பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. கடைசியாக நாமினேட் ப்ரீ பாஸ் இடத்தில் மஞ்சரி, தர்ஷிகா, பவித்ரா, தீபக், சத்யா, அருண், ஜெஃப்ரி ஆகியோர் இருக்கின்றனர்.
இதில் அனைவரும் போட்டி போட்டு வரும் நிலையில், கடைசியாக ஜெஃப்ரிக்கு நாமினேஷன் ப்ரீ பாஸ் கிடைத்துள்ளது. கடந்த வாரம் மஞ்சரி இந்த பாஸை பெற்ற நிலையில் தற்போது ஜெப்ரி இதை பெற்று ஒரு வாரம் சேவ் ஆகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் தர்ஷிகாவிற்கு கிடைத்துவிட கூடாது அவர் வெளியேற வேண்டும் எனவும் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.