சின்னத்திரை தொகுப்பாளினிகளுக்குள் மோதலா?

Manimegalai and Priyanka
Manimegalai and Priyanka
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இரண்டு நாட்களாக இணையத்தில் நடைபெறும் சண்டைக் காட்சிகள், கருத்து மோதல்கள் எல்லாம் சினிமா ரசிகர்களின் சண்டையை தாண்டி முதலிடம் பெற்றுள்ளது. விஜய் டிவி தொகுப்பாளினிகள் மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோர் ரசிகர்களின் சண்டை புண்ணியத்தால் நடிகர் விஜயின் GOAT பாக்ஸ் ஆபிஸ் சர்ச்சைகள், பன் GST மன்னிப்பு சர்ச்சைகள், 'வாழை' பட விமர்சன சாருவின் சர்ச்சைகள், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொன்னதால் நடிகர் விஜய்க்கு எதிராக இணைய கருத்துக்கள் என அனைத்து இணைய டிரண்டிங்களையும் ஓரம் கட்டி வைத்துள்ளது. 

விஜய் டிவியின் சமையல் நகைச்சுவை நிகழ்ச்சியான  குக் வித் கோமாளியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை அந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். 2019 இல் இருந்து குக் வித் கோமாளியின் அங்கமாக இருந்த அவர் தற்போது விலகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் குற்றம் சாட்டி இருப்பதால் தற்போது இணையத்தில் அது முக்கிய பேசு பொருளாக உள்ளது.

இந்த சீசனில் குக்காக வந்த விஜய் டிவியின் மற்ற தொகுப்பாளினி ஒருவர் (பெயரை குறிப்பிடாமல்) நிகழ்ச்சியில் தன்னை மட்டுப்படுத்துவாதகவும் மரியாதை குறைவாக நடத்தியதாகவும் தெரிவித்து இருந்தார் மணிமேகலை. 

கடந்த சீசன் வரை CWC நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக இருந்தார். விதவிதமான வேஷங்களை போட்டு வந்து  பலரையும் சிரிக்க வைத்தார். இந்த சீசனில் அவருக்கு பிரமோஷன் கிடைத்து ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தி வந்தார். மணிமேகலை சிரிக்க வைத்தாலும் அவ்வப்போது செண்டிமண்டாக பேசியும் மக்களை கவர்வார். 

இதையும் படியுங்கள்:
செக்டர் 36 - நொய்டா தொடர்கொலைகளும் அடித்தட்டு மனிதர்களின் உயிரின் விலையும்!
Manimegalai and Priyanka

முன்பு இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் , தாமு கூட்டணி  இருந்தவரை நிகழ்ச்சியில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. சிவாங்கி, மணிமேகலை, மதுரை முத்து போன்றோர் நாகரீகமான நகைச்சுவைகளை செய்து ரசிக்க வைத்திருந்தனர். ஆனால், இம்முறை நகைச்சுவை என்ற பெயரில் வரம்பு மீறல்கள் அதிகம் இருந்தன. 

வெறும் வாயை மெல்லும் இணையவாசிகளுக்கு மணிமேகலை விலகுவதாக அறிவித்ததும் அவல் கிடைத்து விட்டது. பிரியங்கா பெயரை எங்கும் மணிமேகலை குறிப்பிடவில்லை. ஆனாலும் இவர்கள் தோண்டி எடுத்து விமர்சனம் செய்கின்றனர். மறுபுறம் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பல டிவிட்கள் வந்துக் கொண்டே உள்ளன. பிரியங்காவிற்கு திறமை இருப்பதால் நிறைய ஷோக்கள் கிடைக்கிறது. மணிமேகலைக்கு பொறாமை என்றும் எழுதி தள்ளுகிறார்கள். 

குறிப்பாக குட் நைட் படத்தில் மணிகண்டன் மேனேஜரை எதிர்த்து பேசும் ஒரு வசனம் வரும் "டேய், நான் திறமை உள்ளவன். எங்க போனாலும் பொழச்சிப்பேன், நீ அவசரப்பட்டு வேலைய விட்டுடாதடா! உனக்கு வேற இடத்தில் வேலை கிடைக்காது" என்ற மீமிஸை பகிர்ந்து பிரியங்காவை கிண்டல் செய்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
சூட்டிங் ஸ்பாட்டில் அவர் விஜயை அடித்தார் – நடிகர் பொன்னம்பலம் கூறிய அந்த தகவல்!
Manimegalai and Priyanka

உலகம் முழுக்க அமெரிக்க அதிபர் தேர்தல், இஸ்ரேல் காசா போர், ரஷ்யா உக்ரைன் போர் என்று பரபரப்பாக இருக்கும் வேளையில் நாம் சின்னத்திரை நடிகைகளின் சண்டையை பேசு பொருளாக வைத்திருக்கும் அளவுக்கு நாடு உள்ளது என்று வேண்டுமானால் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com