எது பிக்பாஸ் போட்டியாளர்கள் குக்வித் கோமாளிக்கு வராங்களா? யாரெல்லாம் தெரியுமா?

Cooku with Comali Season 5
Cooku with Comali Season 5
Updated on

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஆதரவு உள்ளது. குக்கிங் ஷோவை அழகாக எடுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு அதிக ரசிகர்கள் உண்டு.

இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிறைய கோமாளிகளுக்கு பல வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குக் வித் கோமாளியின் 5வது சீசன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை என்று சொல்லி வந்த நிலையில், விஜய் டிவி புதிய புரோமோவை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது. இந்த ஷோவில் இருந்து வெங்கடேஷ் பட் வெளியாகிய நிலையில், செஃப் தாமுவுடன் மற்றொரு செஃப் இணைந்துள்ளதை அதில் கூறினர். இந்த நிலையில் போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
"காசு இருந்தால் என்னை சந்தியுங்கள்" மீட்டிங்கிற்கு விலை பேசிய இயக்குனர் 'அனுராக் காஷ்யப்'!
Cooku with Comali Season 5

ஏற்கனவே சில போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்ற பூர்ணிமா, தினேஷ் மற்றும் முந்தைய சீசனில் பங்கேற்ற பிரியங்கா தேஷ் பாண்டேவும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிகிறது. கடந்த குக்வித் கோமாளி சீசன் பைனலில் பங்கேற்ற பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் வரவேண்டும் என ரொம்ப ஆசை என தெரிவித்திருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com