குக்வித் கோமாளிக்கு டாட்டா சொன்ன செஃப்... புது நடுவரை அறிவித்த விஜய் டிவி!

Cooku with Comali Season 5
Cooku with Comali Season 5

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பட்டிதொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதுவரை 4 சீசன்கள் கடந்த நிலையில் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் பங்கேற்ற குக்குகளை விட கோமாளிகளே அதிக வாய்ப்பை பெற்று தற்போது சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க அதற்கு இந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியே காரணமாகும்.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றவர்கள் தான் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட். இருவரும் குக்கோடும், கோமாளிகளோடும் சரிசமமாக இறங்கி ஃபன் செய்வது மக்களை ரசிக்க செய்தது. அதிலும் குறிப்பாக செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு என்று சொல்லலாம். அவர் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலே பலரும் மெசேஜ் அனுப்புவதாகவும், அடுத்த வாரம் இதனால் தான் வரவில்லை என அவர் நிகழ்ச்சியிலேயே மன்னிப்பு கேட்பார். அப்படி ரசிகர்களின் ஃபேவரைட் ஆன இவர், அடுத்த சீசனில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து செப் தாமுவும் அடுத்த நாளே நானும் பங்கேற்கமாட்டேன் என அறிவித்தார். இருவரும் வேறு நிகழ்ச்சியில் உங்களை சந்திப்போம் என தெரிவித்த நிலையில் குக்வித் கோமாளி நடைபெறாது என்ற பேச்சுக்கள் எழுந்து வந்தது.

குக்வித் கோமாளி
குக்வித் கோமாளி

இந்த நிலையில், தற்போது புதிய நடுவரை அறிவித்து, குக்வித் கோமாளி நிகழ்ச்சி வரவுள்ளதை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சீசன் 5 தொடங்குவதற்கு முன்பே பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், குக்வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகரும் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராகப் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜனின் என்ட்ரி இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்று கூறப்பட்டது. சமீபத்தில் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் மாதம் பட்டி ரங்கராஜனின் சமையல்தான் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
"திரும்ப வந்துட்டேனு சொல்லு" சிக்ஸ் பேக்குடன் ஆர்யா வெளியிட்ட புகைப்படம்... கொண்டாடும் ரசிகர்கள்!
Cooku with Comali Season 5

அதோடு சமூக வலைத்தளத்திலும் இவருக்கு அதிகமான பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இதனை உறுதிபடுத்தும் விதமாக விஜய் டிவி வீடியோ வெளியிட்டுள்ளது. மேலும் செஃப் தாமுவும் இந்த வீடியோவில் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செஃப் தாமு விலகவில்லை என தெரிகிறது.

logo
Kalki Online
kalkionline.com