
விஜய் டிவியில் வரும் சீரியல்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரை அனைத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் வரும் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு இருந்த அதே வரவேற்பு தற்போது நடந்த 6-வது சீசன் வரை இருந்தது என்றே சொல்ல வேண்டும். சாதாரண சமையல் நிகழ்ச்சியை மட்டும் காட்டாமல், அதில் காமெடியை கலப்பதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக் காரணம். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சவால், டாஸ்குகள் மற்றும் காமெடி டிராமாக்கள் நிகழ்ச்சியை ரசிகர்கள் சலிக்காத வண்ணம் கொண்டு செல்லும்.
அந்த வகையில், VJ ரக்ஷன் தொகுத்து வழங்கும் குக் வித் கோமாளி 6-வது சீசன் நடுவர்களாக சமையல்காரர் ஷெஃப் தாமு, கௌஷிக் சங்கர், தீனா மற்றும் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதில் மதுமிதா, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா, லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தக்குமார், பிரியா ராமன், ராஜு ஜெயமோகன், ஷபானா, உமைர், ஜாங்கிரி மதுமிதா ஆகிய 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.
ஒவ்வொரு வாரமும் நடந்த சமையல் போட்டியில் ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில் முதல் ஆளாக பைனலுக்குள் காலடி எடுத்து வைத்தார் ஷபானா. இதற்கு அடுத்தபடியாக லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ராஜு ஆகியோர் பைனலுக்கு சென்ற நிலையில், கடைசியாக நடந்த வைல்டு கார்டு சுற்றில் வெற்றிபெற்று உமைர் நான்காவது நபராக பைனலுக்குள் நுழைந்தார். இவர்கள் நான்குபேர் தான் இறுதிப் போட்டியில் மோதினர்.
ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் இப்னு லத்தீப் மற்றும் ராஜுக்கு இடையே 3 மணி நேரம் நடந்த இறுதிப்போட்டி மிகவும் கடுமையாக நடைபெற்ற நிலையில் கடைசியில் நடிகர் ராஜு 6-வது சீசன் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் இடத்தை நடிகை ஷபானா பிடித்தார்.
வின்னர் ராஜுவிற்கு, குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கப்பட்டதோடு, அவருக்கு, ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சில பரிசு ஹேம்பர்களும் பிற ஸ்பான்ஸர்களின் பரிசுகளும் கொடுக்கப்பட்டது. இது போக, ஒரு எபிசோடின் ஷூட்டிங்கிற்கு இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டிடி கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு டைட்டிலை வென்றதும் நடிகர் ராஜு தான்தான். ஒரே நபர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என இரண்டு நிகழ்ச்சிகளிலும் டைட்டில் வின்னர் ஆகியுள்ளது வரலாற்றிலேயே, இதுவே முதல் முறையாகும்.