இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா?

BB 8
BB 8
Published on

பிக்பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் டபுள் எவிக்ஸன் இல்லையென்றும், ஒருவர்தான் வெளியேறப்போகிறார் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரஞ்சித், விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். மேலும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் பங்கேற்றனர். இதனையடுத்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறியிருக்கிறார்கள்.

பிக்பாஸ் தொடரில் தற்போது போட்டியாளர்கள் மத்தியில் போட்டி பொறாமை ஆகியவை வெடித்திருக்கிறது. ஆனால், அந்த போட்டிகளில் சீரியஸாக விளையாடுவது கிடையாது. இது பிக்பாஸுக்கே கோபம் வருகிறது.

அதேபோல்தான் கேப்டன்ஸி டாஸ்க்கில் முத்து விட்டுக்கொடுத்து விளையாடியதால் பிக்பாஸ் டென்ஷனாகிவிட்டார். இதனால், கேப்டன்ஸி டாஸ்க் மற்றும் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: விடுதலை 2 - முதல் பாதி பேச்சு மட்டும்! இரண்டாம் பாதி பேச்சும் வீச்சும்! ஆனால்...?
BB 8

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடந்ததுபோல், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஆனால், இந்த வாரம் சிங்கிள் எலிமினேஷன்தான் இருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. வெளியே போகப்போவது ராயன் அல்லது ரஞ்சித் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நாளைய எபிசோடில் யார் வெளியேறப்போகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
உடல், மனம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தும் தியானம்!
BB 8

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி நகர்வதால்தான் கடந்த இரண்டு வாரங்களாக இரண்டு எவிக்ஸன் நடைபெற்றது. ஆனால், இந்த வாரம் ஒரே எவிக்ஸன்தான். ஆனால், டாஸ்க்குகளெல்லாம் கடுமையாக இருக்கிறது. போட்டியாளர்கள் இனியாவது சீரியஸாக எடுத்து விளையாடினால்தான் விறுவிறுப்பாக இருக்கும். இல்லையெனில் பிக்பாஸ் டென்ஷன் ஆனதுபோல், ரசிகர்களும் டென்ஷனாகி விடுவார்கள்.

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், இன்றும் நாளையும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார். பாவம்! இந்த வாரம் போட்டியாளர்கள் செய்த அத்தனை காரியங்களுக்கும் விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறாரோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com