
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கு என்றால் அது டிவியில் சீரியல் பார்ப்பது தான். அந்த வகையில் பெண்கள் மட்டுமே சீரியல்களை பார்க்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் டிவி சீரியல்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர். ஒவ்வொரு சேனல்களுக்கு சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் வகையில் அவர்களுக்கு விருப்பமான வகையில் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
அந்த வகையில் காலையில் 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை ஒவ்வொரு சேனல்களிலும் சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளது. பல சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும், சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டலும் சன் மற்றும் விஜய் டிவிக்கு இடையே தான் எப்போதும் போட்டி நிலவும்.
சன் டிவியில் கிட்டத்தட்ட 18 சீரியல்களை ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதிலும் குறிப்பாக கயல், மூன்று முடிச்சி, சிங்கப்பெண்ணே, ஆனந்த ராகம், எதிர்நீச்சல் போன்ற சீரியல்களை சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலுக்கு பெண்களின் அமோக ஆதரவு உண்டு என்றே சொல்ல வேண்டும்.
வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வசதியாக, மாலை நேரத்தில் முக்கியமாக எல்லா வேலையும் முடித்துவிட்டு பார்க்கக்கூடிய சீரியலுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால் அந்த நேரத்தில் அனைத்து தரப்பினரையும் பார்க்க தூண்டும் சீரியல்களை தேர்வு செய்து ஒளிபரப்பட்டு வருகிறது.
அதேபோல் சன்டிவியில் இரவு 9.30 ஸ்லாட் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. பிரைம் டைம்மான இந்த நேரத்தில் வழக்கமாக முக்கியமான சீரியல்கள் மட்டுமே ஒளிப்பரப்பாகும். இந்நிலையில் தற்போது இந்த டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் புகழ் இயக்குனர் திருச்செல்வத்தின் ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஆரம்பம் முதலே அதிரடி திருப்பங்கள், கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.
அடிமைத்தனமாக இருக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் துணிச்சலையும் கொடுத்து அவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஈஸ்வரியாக நடித்த கனிகா விலகிய நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கும் குணசேகரனுக்கும் உச்சக்கட்ட யுத்தம் நடந்து வரும் நிலையில் இதுவரை ஆடிய ஆட்டமெல்லாம் போதும் என்று மொத்தமாக முடித்து விடும் விதமாக ஜீவானந்தம் இந்த சீரியலை முடிக்கப் போவதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
அனைவரையும் ஆட்டிப் படைக்க நினைத்த குணசேகரனுக்கு தண்டனை கிடைத்ததா?, பல கஷ்டங்களையும் துன்பங்களையும் தாண்டிய எதிர்நீச்சல் பெண்களுக்கு வெற்றி கிடைத்ததா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
ஈஸ்வரி இந்த சீரியலில் இருந்து விலகியதும் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்த நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி இல்லத்தரசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இந்த சீரியல் முடிவடைய உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.