
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலின் தொடர்ச்சியான எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்களிடையே கிடைத்த அமோக வரவேற்பு எதிர்நீச்சல் 2க்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணமாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் மரணம் சீரியல் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வத்தை குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்த சீரியலில் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுவது போன்ற காட்சிகள் தொடர்ந்து வருவதால் பெண்கள் இடையே அதிக ஆர்வத்தை காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் இதில் வரும் பல காட்சிகள் நம்பத்தகுந்ததாக இல்லையென்றாலும் நந்தினி, ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் இடையே அமோக ஆதரவு உள்ளதால் இந்த சீரியல் தொடர்ந்து TRPல் முதல் ஐந்து இடங்களுக்கு வந்த விடுகிறது விடுகிறது.
கடந்த ஒரு வாரமாக இந்த சீரியலில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஈஸ்வரியை சுற்றியே கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் ஈஸ்வரியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் ஜனனி, ரேணுகா, நந்தினி குழப்பத்தில் இருந்தார்கள். ஈஸ்வரி தானாக கீழே விழவில்லை, யாரோ ஒருவர்தான் இவருடைய இந்த அடிக்கு காரணம் என மருத்துவர் கூறிவிட்டதால், அனைவருக்கும் இந்த வேலையை செய்தது ஆதி குணசேகரன் தான் என்று தெரிந்து விட்டது.
இதற்கு காரணமான ஆதி குணசேகரன் மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தர்ஷினி போலீஸ் கொற்றவையிடம் கூறுகிறார். சட்டரீதியாக அதற்கான முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால் இங்கே ஈஸ்வரியை அடித்து கொலை செய்யப்பார்த்தது ஆதி குணசேகரன் தான் என்கிற ஆதாரம், அறிவுக்கரசிக்கு கிடைத்துவிட்டது.
அடுத்து, ஆதிகுணசேகரன் போலீசிடம் மாட்டுவாரா அல்லது எப்போதும் போல் தப்பித்து விடுவாரா என்று இப்படி கதைக்களம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா வெளியேறப்போவதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தனை வருடங்களாக பயணித்த கனிகா இந்த தொடரை விட்டு வெளியேற இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் இந்த சீரியலுக்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் இதில் வரும் நந்தினி, ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா கதாபாத்திரங்கள் தான். தற்போது ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த கனிகா விலக உள்ளதாக உலா வரும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மை என்று தெரிவில்லை.
அதாவது, எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஈஸ்வரி கதாபாத்திரத்தை கோமா நிலைக்கு தள்ளியதற்கு முக்கிய காரணம் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த கனிகாவிற்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருப்பதாகவும், அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் இதிலிருந்து விலகுவதற்கு தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆகையால் கோமா ஸ்டேஜிலேயே வைத்து அவரை காண்பிக்காமல் இயக்குனர் தொடரை தொடர உள்ளாரா இல்லை இறந்து விட்டதாக கூறி ஈஸ்வரியின் கேரக்டரை முடிவுக்கு கொண்டு வரப்போகிறாரா என்று தெரியவில்லை.
அப்படி ஈஸ்வரி இந்த சீரியலில் இருந்து விலகும் பட்சத்தில் வேறு ஒருவரை அந்த கதாபாத்திரத்தில் நிச்சயமாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் எதிர்நீச்சலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவிற்கு பதிலாக வேலராமமூர்த்தியை கொண்டு வந்ததை ரசிகர்கள் விரும்பாததால் நாடகம் தடம் புரண்டு, TRPல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு, முதல் சீசனை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த முறையும் அதே நிலைமை எதிர்நீச்சல் 2 சீரியலுக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஈஸ்வரி கதையை அப்படியே முடித்த மாதிரி காட்டலாம் என்பதற்காக ஈஸ்வரியின் கோமாவில் இருப்பது போன்ற சீனை கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சீரியலை பார்க்கும் ரசிகர்களின் ஆர்வமும் குறைந்து TRP கண்டிப்பாக அடிவாங்கும் என்பதால் இப்படி கதைக்களத்தை மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈஸ்வரியாக நடிக்கும் கனிகா விலகுவது குறித்து இந்த சீரியலில் ஜீவானந்தமாக நடிக்கும் இயக்குனர் திருச்செல்வம் இதுவரை வாய்திறக்காத நிலையில், இது உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.