

நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது. 2024ல் இதே டைட்டிலில் ஹார்லன் கோபென் எழுதிய நாவலைத் தழுவித் திரைக்கதை அமைக்கப்பட்ட வெப் சீரிஸ் இது.மொத்தம் 8 எபிசோடுகள். ஒவ்வொன்றும் 35 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை. ஆக மொத்தம் 330 நிமிடங்கள் (ஐந்தரை மணி நேரம்).
ஸ்பாய்லர் அலர்ட் (Spoiler Alert) :
நாயகன், ஒரு சட்டக்கல்லூரியில் புரொபசராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்; அவரது மனைவி, ஒரு டாக்டர். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். பேஸ்பால் பேட்டால் தன் மகனையே கொலை செய்ததாக நாயகன் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் பெறுகிறார். கடந்த 5 வருடங்களாக அவர் ஜெயிலில் தான் இருக்கிறார்.
அவர் வாழ்க்கையே வெறுத்தவராக இருப்பதற்கு காரணம், தன் மகனை அவர் கொல்லவில்லை என்பதுதான். ஆனால், பக்கத்து வீட்டுப்பெண் இவருக்கு எதிராக சாட்சி சொல்லி இருக்கிறாள். மகனைக்கொன்ற பேஸ்பால் பேட்டை, நாயகன் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் புதைத்ததை நான் பார்த்தேன் என்று அவள் கூறுகிறாள். இதனால் தான் நாயகனுக்கு தண்டனை உறுதியானது.
நாயகனின் மனைவியோ அவனது செயலால் வெறுப்படைந்து, வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்டு வேறொரு ஊரில் குடியேறி விடுகிறார். இந்நிலையில், நாயகன் சிறைக்குச் சென்று 5 வருடங்கள் கழித்து, அவனது மச்சினி (மனைவியின் தங்கை) அவனைச் சந்திக்க பார்வையாளராக வருகிறாள்.
"மனைவியே டைவர்ஸ் வாங்கிட்டு வேற ஒரு வாழ்க்கை தேடிப்போனபின், மனைவியின் தங்கைக்கு இங்கே என்ன வேலை?" என நாயகன் முதலில் மச்சினியை சந்திக்க மறுக்கிறான். பின், ஜெயில் அதிகாரியின் வற்புறுத்தலுக்கு இணங்க மச்சினியைச் சந்திக்கிறான்.
மச்சினி நாயகனிடம் ஒரு போட்டோ காட்டுகிறாள்; அதில், நாயகனின் மகன் இருக்கிறான். கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட தன் மகன் உயிரோடு இருப்பதை அறிந்த நாயகன், அப்படியே துள்ளிக்குதிக்கிறான்.
வாழ்க்கையில் எந்த பிடிமானமும் இல்லாமல் இருந்தவனுக்கு இப்போது இரண்டு விஷயங்கள் புத்துணர்ச்சியை அளிக்கின்றன:
1.இறந்து விட்டதாய் கருதப்பட்ட மகன் உயிருடன் இருக்கிறான்.
2.தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கு எதிராக ஒரு ஆதாரம் கிடைத்து விட்டது.
நாயகன் ஜெயிலிலிருந்து தப்பி தன் மகனை எப்படிக்கண்டு பிடித்தான்? இந்த பொய்க்கேசில் அவனை மாட்ட வைத்தது யார் ? என்பதெல்லாம் மீதி கதை.
மேலே சொன்னவை அனைத்தும் முதல் 15 நிமிடங்களிலேயே சொல்லி விடுகிறார்கள். மீதி அஞ்சேகால் மணி நேரம் இருக்கிறது.
நடிப்பு மற்றும் இயக்கம் :
ராபர்ட் ஹல் (Robert Hull) தான் இதை இயக்கியிருக்கிறார். இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. Safe, The Stranger, Gone for Good, Hold Tight, Fool Me Once, Missing You, Run Away ஆகியவை இவர் இயக்கிய/தயாரித்த பிரபல வெப் சீரிஸ்கள்; இவையனைத்தும் நெட்ஃபிளிக்ஸில் இருக்கின்றன.
சபாஷ் டைரக்டர் :
1. அடையாளமே தெரியாதவண்ணம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் சிறுவனின் பிணத்துக்கும் ,நாயகனுக்கும் நடந்த டி என் ஏ டெஸ்ட்டில் அது அவரது மகன் தான் என்று உறுதியானது எப்படி? என்ற சஸ்பென்ஸ் வெளிப்படும் இடம்
2. யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
3. முதல் 30 நிமிடங்களில் கதைக்குள் நம்மை இழுத்துக்கொண்டு எமோஷனல் கனெக்ட்கொடுத்த விதம்.
4. அப்பா - மகன் சென்டிமென்ட் காட்சிகள் அருமை.
லாஜிக் குறைபாடுகள் மற்றும் திரைக்கதை நெருடல்கள்:
1.மொத்தம் ஆறு எபிசோடுகளில் முடிக்க வேண்டியதை 8 எபிசோடுகளாக இழுத்து விட்டார்கள்.
2.மெயின் கேரக்டர்களைத்தவிர பல கேரக்டர்களைப்பாதியில் அம்போ என விட்டு விட்டார்கள்
3.தேவை இல்லாமல் ஆடியன்சை சுற்றலில் விடும் காட்சிகள் உண்டு.அதை தவிர்த்திருக்கலாம்.
13+ குடும்பத்துடன் பார்க்கலாம்.
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான ,விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட நல்ல க்ரைம் திரில்லர் இது.தாராளமாகப் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5