

பெரும்பாலான பார்வையாளர்களின் பேராதரவை பெற்ற 'ஹார்ட் பீட்' (Heart Beat) சீசன் 3 இன்று ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
இந்த தொடரின் முதல் சீசன், 2024-ஆம் ஆண்டு மார்ச் 8 முதல் ஆகஸ்ட் 23 வரை 100 எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பான இத்தொடர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் சீசன் 2025 மே 22 முதல் நவம்பர் 6 வரை ஒளிபரப்பானது.
'ஹார்ட் பீட்' தொடர் மருத்துவமனை நிகழ்வுகளை மையப்படுத்தி மருத்துவர்களாக பணிபுரிபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் நட்பு,காதல்,குடும்ப உறவுகளில் ஏற்படும் மாற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.இதில் தீபா பாலு முதன்மை கதாபாத்திரத்திலும் அனுமோல்,கார்த்திக் குமார்,சாருகேஷ் எம்,அஸ்வதி அக்னிஹோத்ரி,சபரீஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தீபக் சுந்தர்ராஜன் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய இத்தொடரில், தீபா பாலு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனுமோல், கார்த்திக் குமார், சாருகேஷ் எம், அஸ்வதி அக்னிஹோத்ரி, சபரீஷ், அமித் பார்கவ், யோகலட்சுமி, மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அப்துல் கபீஸ் மற்றும் சிதம்பரம் மணிவண்ணன் ஆகியோர் இணை இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 3-வது சீசனில் காயு ஸ்ரீ, ராகுல் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் புதியதாக இணைந்துள்ளனர்.
கதைக்களம்:
ஹார்ட் பீட் மருத்துவமனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வெப் தொடராக அனைவராலும் ரசிக்கப்படுகிறது. பொதுவாகவே மருத்துவமனை குறித்து அறியும் ஆவல் அனைவருக்கும் உண்டு என்பதே இந்த தொடர் வெற்றிக்கு காரணம் எனலாம். இதில் இளம் மருத்துவர்களின் தொழில்முறை வாழ்க்கை, தனிப்பட்ட உறவுகள், நோயாளிகளின் உணர்வுபூர்வமான கதைகள் ஆகியவை இணைந்து சொல்லப்படுவதால் சுவாரஸ்யமாக செல்கிறது.
மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த இளம் மருத்துவர் ரீனா ஒரு பெரிய மருத்துவமனையில் பணியில் சேர்கிறார்.அங்கு கண்டிப்பான மூத்த மருத்துவர் டாக்டர் ரதி உள்ளிட்ட மருத்துவக் குழுவுடன் இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்.ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய நோயாளிகளின் கதைகள், அவசர சிகிச்சை சூழல்கள், மருத்துவர்களின் கடினமான முடிவுகள், அவர்களுக்கிடையேயான நட்பு,காதல்,குடும்ப உறவுகள் மற்றும் பணிச்சுமை ஆகியவை உணர்ச்சிகரமாகக் காட்டப்படுகின்றன.இடையே ரீனா ஒரு திறமையான மருத்துவராக வளர்வதோடு,தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சோதனைகளை சந்திக்கிறார்.மருத்துவமனை வாழ்க்கையின் யதார்த்தம்,மனிதநேயம் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட இந்தத் தொடர்,மருத்துவத் துறையின் பின்னணியை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.
முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய சீசன் இளைஞர் நடிகை அனுமோள் கார்த்திக் குமார், தீபா பாலு,யோகலட்சுமி,மோகன்ராம்,தாபா,அஸ்வதி,சபரீஷ்,அமித் பார்கவ் உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.இவர்களுடன் காயு ஸ்ரீ ராகுல் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் மூன்றாவது சீசனில் இணைகிறார்கள்.
முதல் சீசன் மற்றும் இரண்டாம் சீசன் பார்க்க முடியவில்லை என்று நினைப்பவர்களுக்காக இங்கு அதன் சுருக்கம் :
முதல் சீசனில் கதை சென்னை ஆர்.கே. மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து துவங்குகிறது. புகழ்பெற்ற பொது அறுவை சிகிச்சை நிபுணர் ரதியின் பிரிந்து வாழும் மகளான ரீனாவின் வாழ்க்கைதான் கதையின் களம். ரீனா பயிற்சி மருத்துவராக அங்கு சேர்கிறார். கண்டிப்பான தாய்க்கும் ஒரே நாளுக்கும் இடையே பிரச்சனைகள் எழுகிறது அதுதான் என் தாய் என்ற உண்மையும் தெரிய வருகிறது இதற்கு முன்னதாகவே நான் தனது தாயை காண்பதற்காகவே அந்த மருத்துவமனையில் சேருகிறார் என்று நீங்களும் வழிபடுகிறது இருவரும் சண்டையிட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மறைமுகமாகவே அன்பு செலுத்துகின்றனர் இந்த மருத்துவமனையில் நிகழும் சம்பவங்கள் வித்தியாசமான அனுபவங்களை தரும் விதமாக இடம்பெற்றிருக்கிறது முக்கியமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகளை மருத்துவர்கள் சவால்களை மேற்கொண்டு காப்பாற்றுவது பார்ப்பவர்களுக்கு வெகு சுவாரசியமாக இருக்கும்.
இடையில் அந்த மருத்துவமனையின் நிறுவனரின் மகன் அர்ஜுன் ரீனாவின் காதலனாகிறார். இவர்கள் இடையேயும் தவறான புரிதல் மற்றும் உடல் கூடல் என்று இவர்களின் காதல் சென்று கொண்டிருக்க ரீனாவோ தனது தந்தை யார் என்று தெரிந்து கொள்ளுமா ஆராய்ச்சியில் இறங்குகிறார். இப்படியாக இறுதியில் ரெய்னா தொழில் அனுபவங்களை கற்று அனுபவம் வாய்ந்த சீனியர் மருத்துவராக மாறுகிறார் அதே நேரம் தனது தாத்தாவின் உதவிகள் தனது தந்தையை கண்டறிய முயற்சி செய்கிறார் .இதற்கு நடுவில் உடன் பணியாற்றும் சக மருத்துவர்களும், நண்பர்களும் பல்வேறு திருப்பங்களை சந்திப்பது போன்ற காட்சிகள் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து முதல் பாகம் முடிகிறது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் மேலும் சுவாரசியமாக துவங்குகிறது முன்னதாக ரீனா பிறந்தவுடன் தாய்மதி மெரினாவை காப்பகத்தில் விடுவது போலவும் பின்னர் வேறு ஒருவரையிறது திருமணம் செய்து குழந்தைகளோடு வாழ்வது போலவும் காட்சிப்படுத்தி உள்ளனர் இந்த சூழலில் திடீர் திருப்பமாக சீனாவின் உண்மையான தந்தை டாக்டர் விஜய் என்பவர் ஆர்கே மருத்துவமனை மணிக்கு சூழல் காரணமாக வருகிறார் பிரதியை சந்தி அங்கு ரதியை சந்திக்கும் விஜய் தங்கள் குழந்தையை பற்றி கேட்க அந்த குழந்தை இறந்து விட்டதாக ரதி பொய்யான தகவலை கூறுகிறார்.
இதன் நடுவில் ஒரே நாள் காதலன் அர்ஜுனன் சண்டையிட்டு கோபத்துடன் சாலையில் செல்லும்போது திடீர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் உயிர் காபத்தான நிலையில் மருத்துவமனையில் ரீனா இருக்க மீனாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது தந்தையான விஜய் தான் சரியான தேர்வு என்று அனைவரும் அனைவரும் முடிவு செய்யும்போது விஜய் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மருத்துவராக பணியாற்ற முடியாத நிலையில் விஜய் இருக்கிறார் இந்த சூழலில் தான் ரீனா தான் தனது மகள் என்ற உண்மையையும் விஜய்க்கு தெரிகிறது ஆகவே விஜய் தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி விடுகிறார் தனது தந்தை விஜய் தான் என்பதை அறிந்து முதல் முறையாக அப்பா என்று அழைத்து மகிழ்கிறார் இரண்டாம் பாகத்தின் முடிவில் முதல் பாகத்திற்கான சில ரகசியங்கள் விடுபட்டாலும் புதிய கதைகளத்துக்கான மேலும் சுவாரசியமான புதர்களுடன் மூன்றாம் பாகத்தில் அதன் ரசிகர்கள் எதிர்பார்த்த உள்ளனர்.
மேலும் மூன்றாம் பாகத்தில் முன்னோட்ட காட்சியில் தீபா பாலு மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் பணிபுரிந்து வந்த ஆர் கே மருத்துவமனையில் இருந்து விலகி தந்தையும் வேறு மருத்துவமனைக்கு செல்வது போலவும் ரதி ஆர் கே மருத்துவமனையிலேயே பணிபுரிவது போலவும் அர்ஜுன் மருத்துவ படிப்பை தொடர்வது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரீனா காதல் என்னவானது? தாய் மகளை ஏற்றுக்கொண்டாரா? தந்தையின் வழக்கு என்னவானது போன்ற கேள்விகளுக்கு மூன்றாவது சீசனில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.