

புஷ்பா திரைப்படங்களின் மூலம் நாடு முழுக்க அறியப்படும் பிரபல நடிகராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். நீண்ட காலமாக தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகராக கோலாச்சி வரும் அல்லு அர்ஜுன் தன் ரசிகர்களை, அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தெலுங்கில் இன்னொரு பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ள அவரை , இயக்குவதற்கு ஒவ்வொரு இயக்குனர்களும் போட்டி போட்டுக் கண்டு வருகின்றனர். தற்போது அட்லீ இயக்கத்தில் ராக்கா என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற கூட்டத்தில் அல்லு அர்ஜுன் செய்த செயல், அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அல்லு அர்ஜுனின் அதிகாரப்பூர்வமான ரசிகர் மன்றம் 'AAFA' (Allu Arjun Fans Association) என்று அழைக்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற ரசிகர் மன்ற சந்திப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளவும் எதுவும் நடைபெறாமல் இந்த நிகழ்ச்சி மிகவும் பாதுகாப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் 6 மணி நேரம் தொடர்ச்சியாக பேசி அவர்களை மகிழ்வித்தார். ஏராளமான ரசிகர்களுடன் தனித்தனியாக பேசி அவர்களின் குடும்ப விவரங்கள், வேலைவாய்ப்பு போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். மேலும் அவர்களுடன் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பல ரசிகர்களை கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் தனது அன்பினை அல்லு அர்ஜுன் வெளிப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் உயர்தர விருந்தினை அளித்து மேலும் மகிழ்ச்சி படுத்தினார்.
நிகழ்ச்சியின் போது அல்லு அர்ஜுன் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி அவரது ரசிகர் மன்றத்தை (AAFA) சேர்ந்த உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மாநில குழு ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ₹5 லட்சமும், மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கு ₹3 லட்சமும் விபத்துக் காப்பீடாக வழங்கப்படும். இந்த விபத்து காப்பீட்டினை பெற ரசிகர் மன்றத்தினர் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
ஒரு நடிகர் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தை சொந்த செலவில் அளிப்பது, இதுவே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் அவரது ரசிகர் மன்றத்தினர் 900 பேருக்கு மேல் பயன்பெறுவார்கள்.
தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய அல்லு அர்ஜுன் "உங்களின் ஆர்வத்தையும், இளமை ஆற்றலையும் சரியான முறையில் ஆக்கப்பூர்வமான செயல்களில் செயல்படுத்துங்கள். சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும். என் பெயருக்கு நீங்கள் தூதுவர்கள் என்பதால் சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களையோ அவர்களது ரசிகர்களையோ விமர்சிக்க கூடாது , வெறுப்பை பரப்ப வேண்டாம்" என்று அறிவுரை வழங்கினார்.
கடந்த வருடம் புஷ்பா திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி அல்லு அர்ஜுன் ரசிகை ஒருவர் உயிரிழந்தார், அதன் காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அந்த ரசிகை குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் இழப்பீடு அளித்தாலும், அதன் பின்னர் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ,ரசிகர்கள் பாதிக்க கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார். தற்போது அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள, ரசிகர்கள் விபத்து காப்பீடு திட்டம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.