இந்த வாரம் OTT-ல் என்ன பார்க்கலாம்? ரசிகர்களுக்காக காத்திருக்கும் தமிழ் படங்கள் & வெப் சீரிஸ்கள்..!!

ஹாட்ஸ்டார், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைமில் வெளியாகும் புதிய படங்கள் & வெப் சீரிஸ்களின் முழு பட்டியல்!
இந்த வார OTT வெளியீடுகள்
இந்த வார OTT வெளியீடுகள்
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on

திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகும் ஒவ்வொரு வாரமும் போலவே OTT தளங்களிலும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. குறிப்பாக வார இறுதி நாட்களை குடும்பத்துடன் வீட்டிலேயே பொழுதுபோக்காகக் கழிக்க விரும்புவோருக்கு இந்த வார OTT வெளியீடுகள் நல்ல விருந்தாக அமையும்.

இந்த வாரம் தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வெளியீடுகளில் "heart beat"_ சீசன் 3 முக்கிய இடம் பிடித்துள்ளது..மருத்துவமனையை மையமாகக் கொண்டு உருவான இந்த தொடர் முந்தைய இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது சீசனுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறது.

மருத்துவம்,மனிதநேயம், குடும்ப உறவுகள், உணர்வு பூர்வமான தருணங்கள் என பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.. இதனுடன் பல மொழிகளில் வெளியாகிய திரைப்படங்களும் தமிழ் டப்பிங் வசதியுடன் OTT தளங்களில் கிடைக்கின்றன.. ஆக்க்ஷன், திரில்லர், குடும்பம், காதல் நகைச்சுவை என ஒவ்வொரு ரசிகரின் ரசனைக்கும் ஏற்ற வகையில் பல்வேறு உள்ளடக்கங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் OTT தளங்களின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்து உள்ளது.. வேலைப்பளு, நேரக் குறைவு , திரையரங்கிற்கு செல்ல முடியாத சூழல் போன்ற காரணங்களால் பலர் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் வீட்டில் இருந்தே திரைப்படங்களையும் வெப் சீரீஸ்களையும் ரசிக்கத் தொடங்கி உள்ளனர்..

இதனால் ஒவ்வொரு வாரமும் புதிய வெளியீடுகளை எதிர்பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. இதற்கிடையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற சில படங்கள் விரைவில் OTTயில் வெளியாகும் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.. குறிப்பாக ஜனநாயகன் திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் OTTஇல் வெளியாகலாம் என்ற தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன..

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை ‌..வார இறுதியில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் தரமான பொழுதுபோக்கை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இந்த வார OTT வெளியீடுகள் பல்வேறு தேர்வுகளை வழங்குகின்றன..

உங்கள் விருப்பதற்கு ஏற்ற திரைப்படமோ அல்லது வெப் சீரீஸோ ஒன்றைத் தேர்வு செய்து வீட்டிலேயே சுவாரஸ்யமான திரை அனுபவத்தை ரசிக்கலாம்..

OTT தளங்களின் வளர்ச்சிக்கு என்ன காரணம்?

ஒரு காலத்தில் புதிய திரைப்படங்களைப் பார்க்க திரையரங்குகளே ஒரே வழியாக இருந்தது ‌.ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால், மொபைல் போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் போன்ற சாதனங்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் திரைப்படங்களையும் வெப்சீரீஸ்களையும் பார்க்கும் வசதி உருவாகி உள்ளது.. இதனால் OTT தளங்களின் பயன்பாடு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது ‌‌.. தமிழ் மட்டும் அல்ல மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் படங்கள் தமிழ் வசன வரிகளுடன் அல்லது தமிழ் டப்பிங் இல் கிடைப்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது ‌‌

குறிப்பாக குடும்பத்துடன் வீட்டிலேயே தரமான பொழுதுபோக்கை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு OTT தளங்கள் சிறந்த தேர்வாக மாறியுள்ளது.. அதனால் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ்கள் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்..

நல்ல கதை, தரமான நடிப்பு, வித்தியாசமான திரைக்கதை கொண்ட படைப்புகள் வெளியாகும் போது அவை சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு மேலும் பல பார்வையாளர்களை ஈர்க்கின்றன..

HEART BEAT 3
HEART BEAT 3Source:jiostartamil

Heart beat வெப் சீரிஸின் சிறப்பு என்ன?

மருத்துவ மனையை மையமாகக் கொண்ட கதைக் களம், மருத்துவர்களின் தொழில்முறை வாழ்க்கையுடன் அவர்களின் தனிப்பட்ட உறவுகளையும் உணர்வுகளையும் இணைத்து சொல்லும் விதமே "Heart Beat " தொடரின் பலமாக உள்ளது.. முதல் இரண்டு சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது சீசனில் புதிய மருத்துவ வழக்குகள், மருத்துவமனைக்குள் உருவாகும் மோதல்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

ரீனா (Deepa Balu) கதாபாத்திரம் தொடருமா? என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்திருந்தது‌.ஆனால் சீசன் 3 இல் அவர் மீண்டும் இடம் பெறுவது உறுதியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது‌‌..

மருத்துவ உலகின் பரபரப்பையும் மனித உறவுகளின் உணர்வுகளையும் அழகாக சித்தரிக்கும் "heart beat" season 3 இந்த வார OTT வெளியீடுகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸ்களில் ஒன்றாக உள்ளது..அதே போல பல புதிய திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு விருந்தாக காத்திருக்கின்றன.. இந்த வார இறுதியில் உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு படைப்பைத் தேர்வு செய்து வீட்டிலேயே தரமான திரை அனுபவத்தை ரசிக்கலாம்..

gatta gusti 2
gatta gusti 2 source:district

கட்டா குஸ்தி - 2

'கட்டா குஸ்தி' முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக 'கட்டா குஸ்தி 2' உருவானது. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ள இந்தப் படம், குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'கட்டா குஸ்தி 2 ஜூலை 31ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chinna Chinna Aasai
Chinna Chinna Aasaisource:pinkvilla

சின்ன சின்ன ஆசை :

இந்திரன்ஸ், மதுபாலா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை'.வர்ஷா வாசுதேவ் இப்படத்தை இயக்கியுள்ளார்.தம்பி ராமய்யா, காளி வெங்கட் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.இப்படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசானது.இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

balan movie
balan moviesource:districtapp

பாலன் தி பாய் :

சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

Love O Love
Love O Lovesource:bookmyshow

லவ் ஓ லவ் :

இளம் தலைமுறையின் ரொமான்டிக் திரைப்படம் இது. பவிஷ், நாக துர்கா நடிப்பில் வெளியான திரைப்படம் லவ் ஓ லவ். இந்த படத்தில், கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பைத்தலாட்டம்
பைத்தலாட்டம்source:dinamani

பைத்தலாட்டம் :

தன்யா அனன்யா, மிதுன் சம்பு, ஜெயன் சேர்தலா, சுனில் சுகதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பைத்தலாட்டம்.இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படியுங்கள்:
வரலாற்றிலேயே முதன்முறை! சொந்தச் செலவில் ரசிகர்களுக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் அறிவித்த அல்லு அர்ஜுன்!
இந்த வார OTT வெளியீடுகள்
இதையும் படியுங்கள்:
கிணற்றுக்குள் இருக்கும் பல நூறு ஆண்டு பேய்... 'Secret of Kalinga' ஓடிடி விமர்சனம்!
இந்த வார OTT வெளியீடுகள்
logo
Kalki Online
kalkionline.com