பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

BIggboss 8
BIggboss 8
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நாளை விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கவுள்ளது பிக்பாஸ் சீசன் 8 தொடர். இந்தநிலையில் பிக்பாஸில் கலந்துக்கொள்ளும்  போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒவ்வொருமுறையும் மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். மொத்தம் இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 7 சீசனையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். வாரம் ஐந்து நாட்களைவிட கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். கடந்த சீசனில் கமலஹாசன் ஒரு பக்கமே பேசுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் சிலர் கமலை ட்ரோல் போட்டுத் தாக்கினர்.

மறுபக்கம் கமல் படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஆகையால், அப்போதே அவர் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தவகையில் இந்த சீசனிலிருந்து அவர் விலகியது உறுதியானது. அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுக்க உள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் குறித்துப் பார்ப்போம்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் ரஞ்சித் இடம்பெற்றுள்ளார். விஜய் டிவியில் பிரபலமான சுனிதா, தர்ஷா குப்தா ஆகியோரும் இந்த சீசனில் இடம் பெறுகிறார்கள். சீனியர் நடிகையான ஐஸ்வர்யா, சின்னத்திரை நடிகை அன்ஷிதா கலந்து கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
Pandian Stores 2: ஆதார் அட்டை கேட்ட பாண்டியன்… உண்மை வயது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் தங்கமயில்!
BIggboss 8

சார்பட்டா பரம்பரை மற்றும் குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப், இளம் நடிகை சச்சனா, பாடகர் அனீஸ், நடன இயக்குனர் கோகுல்நாத் ஆகியோரும் இந்த சீசனில் கலந்து கொள்கின்றனர். மாடல் அழகியான சஞ்சனா, சின்னத்திரை நடிகர் அர்னவ், நடிகை பவித்ரா, மேலும் பாக்கியலட்சுமி தொடரின் மூலம் பிரபலமான விஜே விஷால் மற்றும் விஜய் டிவியின் பிரபலம் தீபக் தினகரன் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஜோயா, பாரதி கண்ணமா சீரியல் ஃபேம் அருண் பிரசாந்த், விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் ஆகியோரும் பங்குபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com