விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விரைவில் முடியவுள்ளதாகவும், அதற்கு பதிலாக எதிர்நீச்சல் புகழ் மதுமிதா நடிக்கும் சீரியல் ஒன்று விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
பாக்கியலட்சுமி தொடர் 1200 எபிசோட்களை கடந்து நகர்கிறது. இதுவரை வில்லனாக இருந்த கோபி இப்போது தான் செய்த தவறுகளைப் புரிந்துக்கொண்டு திருந்தி வாழ முயற்சித்து வருகிறார். ஈஸ்வரி பேச்சைக் கேட்டு ராதிகாவை உதாசீனப்படுத்திவிட்டு ஹாஸ்பிடலில் இருந்து பாக்கியா வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி போகிறார்.
இன்னும் சில வாரங்களில் பாக்கியலட்சுமி தொடர் முடிவுக்கு வரவுள்ளது. ஆனால், கோபி திருந்திவிட்டால் ராதிகா மற்றும் பாக்கியா இருவரின் நிலமை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
இந்த சீரியல் முடிவுக்கு வரும் நிலையில், அதற்கு பதிலாக ஒரு புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளனர். அய்யனார் துணை என்ற சீரியல் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்த ஜனனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னா நடிக்கவுள்ளார். மேலும் இதவும் நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மதுமிதா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டார். அதாவது “ எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக கூடிய விரைவில் புது சீரியலுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
எதிர்நீச்சல் 2 சீரியலின் ப்ரோமோ இப்போதுதான் வெளியானது. இதனையடுத்து வெளியான இந்த செய்தியால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
எதிர்நீச்சல் 1 சீசனிலும் நான்கு அண்ணன் தம்பிகளின் கதைதான். அதேபோல் இப்போது மதுமிதா நடிக்கும் அய்யனார் துணை சீரியலிலும் அண்ணன் தம்பிகளின் கதைதான். இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கனா காணும் காலங்கள் போன சீசனில் கலை மற்றும் விக்கியாக நடித்தவர்கள் இந்த தொடரில் அண்ணன் தம்பிகளாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்குப் பார்த்தாலும் இந்த நான்கு அண்ணன் தம்பிகளின் கதைதான் உள்ளது. எதிர்நீச்சல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 இப்போது அய்யனார் துணை.