
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் புஷ்பா. இந்த படம் உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு கொண்டு வந்தனர்.
புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. மக்களிடையே புஷ்பா பட வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் இந்த படம் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
புஷ்பா 2 ரிலீஸ் ஆன முதல் நாளே உலகளவில் ரூ.294 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது புஷ்பா 2. இந்த வார இறுதிக்குள் இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சக்கைப்போடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் வெளியான ஐந்தாவது நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 880 கோடியைத் (உலகளவில்)தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
புஷ்பா 2 அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடித்து நொறுக்கி வருகிறது.
புஷ்பா 2 இந்தியில் முதல் திங்கட்கிழமை ரூ.46 கோடி வசூலித்தது. தெலுங்கில் ரூ.14 கோடியும், தமிழில் ரூ.3 கோடியும், கன்னடத்தில் ரூ.0.5 கோடியும், மலையாளத்தில் ரூ.0.6 கோடியும் வசூலித்துள்ளது.
இப்படம் வடஅமெரிக்கா (80.07 கோடி), யுகே- (12.01 கோடி) போன்ற வெளிநாடுகளிலும் பரபரப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
ஷாருக்கானின் ஜவான் மற்றும் பதான், ரன்பீர் கபூரின் அனிமல் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை இப்படம் முறியடித்ததுள்ளது.
இந்த படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. அல்லு அர்ஜுன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பகத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.